பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

wii

களில் ஒன்றிரண்டு மட்டும் இணைக்கப்பட்டிருக்கும். ஆளுல் திரு. முதலியார் எழுதிய நூலில் ஒவ்வொரு தலங்களைப்பற்றிய அரிய குறிப்புகள் பலவும், கல்வெட்டுச் செய்திகளும் எழுதப் பட்டுள்ளன. இந்நூலில் குறிக்கப்பட்டுள்ள சிவதலங்களுக்கு அண்மையில், வைணவத் தலங்களும், முருகப்பெருமகன் தலங்களும் இருப்பின், அவற்றைப்பற்றிய சிறு குறிப்புகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்நூலின் தனிச்சிறப்பு அவ்வத் தலங்களில் பாடப் பட்டுள்ள பதிகம் எந்த யாப்பில் அடங்கவல்லது, அவ்வப் பதிகப் பண் இக்கால இராகத்திற்கு எந்த அளவுக்கு ஒத்து வருகின்றது, என்பன நன்கு எடுத்து விளக்கப்பட்டிருப்பதா கும். அவற்றிற்கு எடுத்துக் காட்டாக அப்பர், திருக்கச்சி ஏகம் பனப் பற்றிப் பாடியுள்ள கரவாடும்வன் நெஞ்சர்” என்று தொடங்கும் பதிகத்தைத் தரவு கொச்சகம் என்றும், இப் பதிகப் பண்ணுகிய காந்தாரத்தைச் சங்கராபரண ஜன்ய சாக மாகிய நவரோசு என்று ஒருவாறு கூறலாம்" என்றும் எழுதி இருப்பதைக் காட்டலாம். பக்கம் 27) .

பெரிய காஞ்சிபுரம் என்பது தொன்று தொட்டப் பெயதே என்பதை அப்பர் வாக்காகிய பெருங்காஞ்சி என்னும் எம். விஞ்ஞகனே' (பக். 82) என்பதை எடுத்துக்காட்டி நிறு புள்ளார். .

மூவர் பாடல்கள் இலக்கியச் சுவையில் ஈடும் எடுப்பும் அற்ற நிலையில் விளங்கவல்லவை என்பதைச் சுந்தரரின் திருஒனகாந்தன்தளிப் பதிகத்தின் வாயிலாகவும், அப்பரது திருஒற்றியூர்ப் பதிகத்தின் வழியாகவும் எடுத்துக்காட்டி யுள்ளதை இந்நூலில் படித்து இன்புறலாம்.

ஒவ்வொரு தலத்துப் பதிகங்களில் பொதிந்துள்ள பொருள் செறிவுகளே யெல்லாம் பகுத்துப் பகுத்துக் காட்டி விளக்கிச் செல்லும் போக்கையும் இயற்கை வளன் , இறைவன் தன் இயல்பு, மக்கள் இயல்பு, இலக்கியச்சுவை, ஆகிய இன்னுேரன்னவற்றையும் இந்நூல் முழுமையும் காணலாம். இந்தப் போக்கிலேயே ஏனய நாட்டுப் பாடல்பெற்ற தலங் களையும் பாலூர் முதலியார் அவர்களே எழுதி வெளியிட அன்னர்க்கு அறிவும் ஆற்றலும் உடல் நலனும் பொருள் வளனும் உள்ளக்கிளர்ச்சியு ஆயுள் நீடிப்பும் தந்தருள

அம்பலவாணரின் திருவடிகளைப் போற்றுகின்ருேம்.