பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

10. திருவல்லம்

இத்தலம் இதுபோது திருவலம் என்று கூறப் படுகிறது. இதன் வில்வாரண்ய ைேஷத்திரம் என்றும் கூறுவர். இத்தலத்து இறைவரைத் தீக்காலி என்னும் அசுரன் பூசித்துள்ளான், அதல்ை இது தீக்காலி வல்லம் என்றும் கூறப்படும். நவக்கிரகங் களும் இத்தலத்துக் கடவுளை வழிபட்டுள்ளன. வல்லாளன் என்னும் அரசனும் பூசித்துள்ளான். கோயில் பெரியது. கோபுரங்கள் உண்டு. திரு. வல்லம் இரயில் அடியில் இருந்து வடகிழக்கே கல் சாலையில் ஒன்றரை மைல் தூரத்தில் இக் கோயில் உளது. இங்குள்ள இறைவர் வல்லநாதர் என்றும், இறைவியார் வல்லாம்பிகை என்றும் கூறப் பெறுவர். இறைவர் வல்லநாதேஸ்வரர் என்றும் கூறப் பெறுவர். இங்குள்ள தீர்த்தங்கள் கெளரி தீர்த்தம், சிவகெங்கை, நீவாநதி, வச்சிரதீர்த்தம், என்பன. இந்த வச்சிர தீர்த்தம் இந்திரன் அகலிகை யுடன் சேர்ந்து இன்புற்ற பாபம் நீங்க அவனுல் உண்டாக்கப்பட்டது. அதில் அவன் மூழ்கித் தன் பாவத்தைப் போக்கிக் கொண்டனன். இது சனக. மகாராசனுக்கு இறைவர் காட்சி கொடுத்த தலமும் ஆகும். இங்குள்ள நந்தி கிழக்குப் பார்த்திருக்கும். இறைவர் மூலட்டானம் மேற்கு நோக்கி இருக்கும். இத்தலத்திற்குத் திருஞான சம்பந்தர் பாடிய பதிகம் ஒன்றே உளது. .

அப்பதிகம் கலிவிருத்த யாப்பால் அமைந்தது. அதாவது ஓர் அடிக்கு ஈரசைச் சீர்கள் நான்கு கொண்டு, இவ்வாறு நான்கடிகளுடன் வருவது. இதன் பண் வியாழக் குறிஞ்சி. இவ் இசையை இக்காலத்துச் செளராஷ்டிர இசை என ஒருவாறு கூறலாம்.