பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. திருவல்லம் 露?

இத்தலத்தில் வில்வநாதேசுவரர் ஆலயம் என்னும் பெயரில் மற்றும் ஒர் ஆலயம் உண்டு. இக் கோவிலுக்குள் நடுவேஸ்வரர் என்னும் @Lfಲ. மற்றும் ஓர் சிவாலயமும் உண்டு. இத்தலத்தில் பல கல்வெட்டுகள் உள. இக்கல்வெட்டுகளால் குக்க னுணர் கிராம வருவாய்த் திருவல்லத்திற்குக் கொடுக் கப்பட்டது என்பதும், பொன்படு குட்டத்து நிலங் கள் விளக்கிற்காகவும், படையலுக்காகவும் கொடுக் கப்பட்டன என்பதும் அறியப்படுகின்றன.

இத்தலத்து இறைவர் 'தாயவன் உலகுக்கு” 'தன் ஒப்பில்லாத தூயவன், சார்ந்தவர்க்கு இன்பங்கள் தழைக்கும் வண்ணம் நேர்ந்தவன்”. “கொய்தவம் மலர் அடி கூடுவார் தம், மைதவழ் திருமகள் வணங்க வைப்பவன்” (அதாவது இறைவர் தம் திருவடியை அழகிய மலர் இட்டு வணங்குவர் கட்கு இலக்குமி வணங்கிப் பணி கேட்கும் அளவுக்கு அருள் செய்வர் என்பது) பெரியவர், சிறியவர் சிந்தைசெய்ய அறியவன்' என்றெல்லாம் சிறப்பிக் கப்படுகிரு.ர்.

திருவல்லும் திருஞானசம்பந்தரால் வளநகர்' என்றும் கற்றவர் திருவல்லம்' என்றும் புகழப் பட்டுள்ளது.

கொய்த அம் மலர் அடி கூடு வ:தம் மைதவழ் திருமகள் வணங்க வைத்துப் பெய்தவன் பெருமழை உலகம் உய்யக் செய்த வன் உறை விடம் திரு வல்லமே ’’

-முதல் திருமுறை, திருவல்லத் தலத்திலிருந்து ஆறு கல் சென்ருல் முருகன் கோயிலே அடையலாம். பஸ் போக்கு

அம் . அழகிய, உய்ய - பிழைக்க, உறைவிடம் - இருப்பிடம்.