பக்கம்:தொண்ணூறும் தொள்ளாயிரமும்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 பெயர்களாயிருந்தன. தொண்டு என்னும் ஒன்ரும் இடப்பெயர் வழக்கறவே, தொண்பது என்னும் பத்தாமிடப் பெயர் ஒன்ருமிடத்திற்கும், தொண் ஆணுாறு என்னும் நூருமிடப் பெயர் பத்தாமிடத்திற் கும், தொள்ளாயிரம் என்னும் ஆயிரத்தாமிடப் பெயர் நூருமிடத்திற்குமாக வழங்கத் தலைப்பட்டன. தொண்பது என்னும் பெயர் முறையே தொன்பது ஒன்பது என மருவிற்று. ஆயிரத்தாமிடப் பெயர் நூருமிடத்திற்கு வழ்ங்கவே 9000 எ ன் னும் எண்ணக் குறிக்க ஒன்பது என்னும் பெயருடன் ஆயிரம் என்னும் பெயரைச் சேர்க்க வேண்டிய தாயிற்று. முதல் பத்து எண்ணுப் பெயர்களில் ஒன்பது என்பதைத் தவிர, மற்றவையெல்லாம் ஒரு சொல்லாயிருப்பதையும், ஒன்பது என்பது இரு சொல்லாய்ப் பது (பத்து) என்று முடிவதையும் தொண்ணுறு என்பது நூறு என்றும் தொள்ளா யிரம் என்பது ஆயிரம் என்றும் முடிவதையும், நோக்குக. தொண்பது என்பதின் திரியான ஒன்பது என்னும் சொல்லுக்குப் பொருந்தப் புகலும் முறை பற்றி ஒன்று குறைந்த பத்து என்று பொருள் கூறுவர் சிலர். அதுவே அதன் பொருளாயின் தொண்ணுாறு தொள்ளாயிரம் என்பவற்றிற்கும் அப்பொருள் ஏற்கவேண்டும். அங்ங்ணம் ஏலாமையின் அது போலியுரையென மறுக்க. ஆகவே தொண்டு + பத்து = தொண்பது, தொண்டு + நூறு= தொண் ணுாறு, தொண்டு + ஆயிரம் = தொள் ளாயிரம் என்று புணர்ப்பதே முறையென்றும், தொண்டு என்னும் எண்ணுப் பெயர் வழக்கற்றதினுல் அதன் மேலிடப் பெயர்கள் மூன்றும் ஒவ்வோரிடமாய்த் தாழ்ந்து வந்து வழங்கின என்றும் அறிந்து கொள்க’.