பக்கம்:தொண்ணூறும் தொள்ளாயிரமும்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 g) g(3um @Gaj, duo4 de + viginti = duodeviginti என்ருல், இருபதிலிருந்து இரண்டு நீங்கியதுஅதாவது, பதினெட்டு (20-2=18) என்று பொரு 'ளாம். duo என்ருல் இரண்டு. பதினெட்டு என் பதை 'XVIII எனவும், பத்தொன்பது என்பதை 'XIX' எனவும் இலத்தீனில் எழுதினலும், இவ் விரண்டு எண்களும் முறையே, இரண்டு குறைந்த இருபது (duodeviginti), ஒன்று குறைந்த இருபது (undeviginti) என்றே வாயால் சொல்லப்படு கின்றன. இருபத்தெட்டு, இருபத்தொன்பதுமுப்பத்தெட்டு, முப்பத்தொன்பது முதலியனவும் இவ்வாறே பெயர் சொல்லப்படுகின்றன. இலத்தீனில் உள்ள இந்த எண் அமைப்பை நோக்குங்கால், தமிழிலும் இப்படியோர் அமைப்பு இருப்பதாக நினைவில் அரும்புகிறது. தமிழிலுள்ள 'ஒன்பது. தொண்ணுாறு', 'தொள்ளாயிரம்' என் னும் எண்ணுப் பெயர்களே இவண் ஆராய வேண்டும். ஒன்பது + பத்து = தொண்ணுாறு எனஅதாவது, ஒன்பது என்னும் சொல்லும் பத்து’ என்னும் சொல்லும் சேர்ந்து தொண்ணுறு' என்னும் சொல்லாக ஆனதாகவும், அடுத்து, ஒன்பது + நூறு=தொள்ளாயிரம் என- அதாவது 'ஒன்பது என்னும் சொல்லும் நூறு' என்னும் சொல்லும் சேர்ந்து தொள் ளாயிரம்' என்னும் சொல்லாக ஆனதாகவும், தலைசிறந்த தமிழிலக்கண நூற்களாகிய தொல்காப்பியமும் ன் னு லு ம்