பக்கம்:தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்

29


3. தொந்தியைத் தொலையுங்கள்


தொந்தியின் கதை

தொந்தி வந்திருப்பது சிங்கார வாழ்வின் சின்னமல்ல; செல்வச் செழிப்பின் தீபம் அல்ல. ஆடம்பர வாழ்வின் அலங்கார ரூபம் என்று பலர் நினைப்பது போல் அல்லவே அல்ல. அது உடலின் தசைத்திசுக்களின் தளர்ந்த நிலையை மெலிந்த நிலையைக் கேலியாகச் சுட்டிக் காட்டுவதேயாகும்.

மூத்துக் களைத்த முதுமையில்தான் தொந்தி வரும். வாழ்வின் போராட்டக் களமாக விளங்கும் நடுத்தர வயதில் தான் தொந்தி வரும் என்பதெல்லாம் ஆதாரமில்லாத வாதம். அறிவற்றவர்கள் கூறும் நொண்டிச் சமாதானம்.

உழைப்பாளிகள் யாருக்குமே தொந்தி வராது; அதாவது உடலை வருத்துகின்ற வேலையாட்களுக்கென்று சொல்ல வரவில்லை. உற்சாகமாக ஒடியாடி வேலை செய்கின்ற அத்தனை பேருக்கும் இது பொருந்தும்.

எந்த வயதினராக இருந்தாலும் , எந்தப் பருவத்தினராக இருந்தாலும் அவர்களுக்குத் தொந்தி வராது. வரக்கூடாது. வரவேகூடாது. அப்படி உழைக்கின்ற