பக்கம்:தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்.pdf/33

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்

31



வகைகள் அத்தனையும் உணவுப் பைக்குள்ளே விழுந்து தொடர்ந்து ஊறிக்கொண்டே இருக்கின்றன.

இவ்வாறு அநேக நாட்கள் என்று, அதிக நேரம் என்று உணவு வகைகளை இரைப்பைக்குள்ளே ஊற வைத்தால் உப்பிக் கொள்ளாதா அந்த இரைப்பை? அதன் மூலமாக அங்கே கொழுப்புச் சத்தும் கொஞ்சம் கூடவே வளர்ந்து கொள்கிறது. கட்டாந் தரையிலேயே புல் முளைக்கும் என்றால் தண்ணீர் விட்டு வளர்த்தால் எப்படி வளரும்?

அதேபோல தான் , குடிகாரர்கள் வயிறும் தடித்தனமாகப் பெருத்துக் கொள்கின்றன. அவர்கள் எத்தனை உழைப்பாளிகளாக இருந்தாலும் தொந்தி வருவதன் ரகசியம் இதுவே.

நாம் உண்ணும் உணவானது இரைப்பைக்குள் சென்று குழம்பாகி, வேறு பல மாற்றங்கள் பெற்று, சிறுகுடல் பகுதிக்குச் சென்று, அங்கிருந்து பெருங்குடல் பகுதிக்குப் போய், இதற்கிடையில் அதன் சத்துக்கள் இரத்தத்தால் உறிஞ்சப்படுகின்றவரை குறைந்தது மூன்று மணி நேரமாகிறது என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டிருக்கின்றனர். இங்கே எல்லாம் தலை கீழ் மாற்றங்கள் தானே நிகழ்கின்றன!

உணவும் தினவும்

இதன் காரணமாகத் தான் காலை, மதியம், இரவு என்று மூன்று வேளை உணவு உண்பது போதும் என்று முன்னோர்கள் கூறினர். ஒரு வேளை மட்டும் உண்பவன்