பக்கம்:தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்.pdf/34

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

32



யோகி; இரண்டு வேளை உண்பவன் போகி, மூன்று வேளை உண்பவன் ரோகி என்ற ஒரு பழம் பாடல் இவ்வாறு கூறியிருக்கின்றது.

மூன்று வேளை உண்பவனை ரோகி அதாவது நோயாளி என்ற அந்தப் பாடல் வழி நாம் ஆராய்ந்தால், நம் இன்றைய நாகரிகத்தின் உணவு முறையை எந்த வாழ்க்கையில் சேர்க்கலாம்?

தூங்கி விழித்தவுடன் தொடங்கி, நடு இரவு வரை நொறுக்குத் தீனியாகவும், விருந்தாகவும், வயிறு முட்ட உண்ணுகின்றார்களே! அந்த வயிறுகள் என்னவாகும்? வந்ததெல்லாம் கொள்ளும் கப்பலாக அல்லவா மாறும்!

பெருந்தீனி தின்பவர்களுக்கும் , பலமுறை உண்பவர்களுக்கும், அளவு தெரியாமல் அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கும் ஏன் தொந்தி வராது? வளராது?

சாப்பிடுவதற்கு முன்னர் தன் வயிற்றைச் சுற்றி ஒரு வைக்கோலைக் கட்டிக் கொள்வார்களாம் நமது தமிழகத்தின் ஒரு பகுதியில் வாழந்த சில மனிதர்கள். சாப்பிட சாப்பிட வயிறு பெரிதாகி, அந்த வைக்கோல் அறுந்து விழும் வரை சாப்பிடுவார்கள் என்று கூட பலர் பேசக் கேட்டிருக்கிறோம்.

அவர்கள் வயிறெல்லாம் நிச்சயம் பானை என்பதை விட சாலாகவே இருந்திருக்கும் என்று நாம் உறுதியாக நம்பலாம்.

உட்கார்ந்த உழைப்பு

நாள் முழுவதும் வேலை செய்து கொண்டுதானே இருக்கிறோம். ஏன் எங்களுக்குத் தொந்தி வருகிறது