பக்கம்:தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்.pdf/8

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6



பட்டை தீட்டத் தீட்ட வைரம் ஒளிவிடுதல் போல, பயிற்சி செய்யச் செய்ய உடல் பளபளக்கும். உறுப்புக்கள் செழிக்கும், வலிமை கொழிக்கும். வாழ்வு சிறக்கும்.

உண்ணுதல், உறங்குதல், உடை உடுத்தல், அலுவலகம் செல்லுதல், போன்ற பழக்க வழக்கங்களை எவ்வாறு அன்றாடம் மேற் கொள்ளுகின்றீர்களோ, அவைகளைப் போலவே பயிற்சியையும் பழக்ககப்படுத்திக் கொள்ளுங்கள்.

இதனால் தொந்தியும் குறையும். தோன்றிவரும் நோய்களும் மறையும். தளாந்து போயிருக்கின்ற உடலும் நிமிரும் உறுதி பெறும்.

வாழ்வைச் சுவைத்து மகிழ நல்ல வாய்ப்பினை அளிக்கும் வழியானது இன்று பிறந்து விட்டது.

நூல் உங்கள் கையில், செயலும் உங்களுடையதே!

இந்நூலினை அழகாக அச்சிட்டுத் தந்திருக்கும் அச்சகத்தாருக்கும், இந்நூல் சிறப்புற வெளிவர பணியாற்றிய அரிமா திரு. ஆர். ஆடம் சாக்ரட்டீஸ் அவர்களுக்கும் என் அன்பு கலந்த நன்றி.

என் இனிய முயற்சிகளுக்குத் துணை தரும் எல்லா அன்பர்களுக்கும், என் இதயங் கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டு இந்நூலையும் ஏற்று ஆதரிக்க வேண்டுகிறேன்.

"லில்லி பவனம்" வணக்கம்
சென்னை - 600 017. டாக்டர்.எஸ். நவராஜ் செல்லையா

குறிப்பு : டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா அவர்கள் முதல் பதிப்பில் எழுதிய முன்னுரையை அப்படியே வெளியிடுகிறோம்.