பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 தொலை உலகச் செலவு மாதலின், தீ விபத்தே நேரிடுவதற்கு வாய்ப்பே இராது எனலாம். அறைகளில் அழுத்தம் குறையுங்கால்: விபத்துகளைத் தடுப்ப தற்கும் விண்வெளி விமானியைக் காப்பதற்கும் டாக்டர் வான் பிரெளன் என்பார் அரியதோர் ஏற்பாட்டை அமைத்துள்ளார். ஒவ்வொருவரையும் பொதிந்து காப்பாற்றக் கூடிய நெருக்கடி sredi 3, G5 ir (Fmergency capsules) o si sırsar. sosir Glasfi விமானத்தில் தம் அறையில் அழுத்தம் குறைவதாக விமானிக்குத் தெரிய வருங்கால் அவர் தாம் அமர்ந்திருக்கும் நாற்காலியின் இருபுறங்களிலுமுள்ள இரண்டு பொத்தான்களை அழுத்த வேண்டும். உடனே நாற்காலி மெதுவாக நகர்ந்து நிமிரத் தொடங்கும். அதன் மேற்புறத்திலும் அடிப்புறத்திலும் இரண்டு உருளைகள் (Cylinders) மெதுவாக நகர்ந்து இறங்கி விமானியைச் சூழ்ந்து இறுக ஒட்டிய குழல் போன்று முடிக் கொள்ளும். இது மத்திய காற்றுத்தரும் மூலத்துடன் இணைக்கப்பெற்றிருப்பதால் உடனே காற்றழுத்தம் ஏற்படு கின்றது. இதைத் தவிரக் காற்றழுத்தம் ஏற்பட வேறு சிறப் பான ஏற்பாடுகளும் உள்ளன. இராக்கெட்டு விமானத்தைக் கட்டுப்படுத்தி ஒட்டக்கூடிய பொத்தான்கள் யாவும் இந்த நாற்காலியுடன் இணைக்கப் பெற்றிருப்பதனுல் விமானி நாற்காலியில் அமர்ந்தவண்ணம் விமானத்தை இயக்கிச் செல்ல முடியும். @ மூடிக் கொள்வ தற்கு முன்பதாகவே வெளியில் மற்றைய சாதனங்களுடன் தொடர்புள்ள இணைப்புக் கம்பிகள் பொருத்தப்பெற்று விடு கின்றன. கூட்டிலிருந்துகொண்டே விமானத்தை அவர்கள் செலுத்த முடியும். அவர்கள் தொடர்ந்து விமானத்தைச் செலுத்த இயலாவிடில்கூட்டிலிருந்துகொண்டே விமானத்தைப் பூமியை நோக்கி இறக்குதல் கூடும். பூமிக்குமேல் 6000 மீட்டருக்கும் குறைவாக இறங்கியதும் விமானி கூட்டினின்றும் வெளியே வந்து விமானத்தைப் பாதுகாப்பர்கக் கீழே இறக்கலாம். இந்த உயரத்தில் அவர்கட்குத் தேவையான காற்றழுத்தமும் இருக்கும்.