பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விண்வெளியில் உயிர்கள் 盘0盘 மேலே கிளம்பும்போது, ஈர்ப்பு விசையின் மிகுதியால் குரங்கின் எடை ஏழு மடங்காக உயர்ந்தது ; அங்ங்னமே துனைக் கோள் கீழிறங்கும்போதும் அதன் எடை பன்னிரண்டு மடங்கு ஆயிற்று. இந்த இரண்டு சமயங்களிலும் குரங்கு மெதுவாக அழுத்தப்பெற்றது. மேல்நோக்கிச் சென்ற துணைக்கோள் வளைந்துசென்று கீழிறங்குவதற்கு எடுத்துக்கொண்ட ஐந்து திமிட நேரம் முழுவதும் குரங்கு எடையின்மையை அனுபவித்தது. இவற்றையெல்லாம் பூமியிலிருப்போர் தொல் திகழ்ச்சி அறிகருவியால் தெரிந்துகொண்டனர். மேற்குறிப்பிட்ட சோதனைகளில் வெற்றிகண்ட அமெரிக்கர் மனிதனே விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியை மேற்கொள்ள லாயினர். இரண்டரை ஆண்டு தக்க பயிற்சிபெற்ற ஆலன்செப்பர்டு என்பவரை சமர்க்குரி-3இல் பாதுகாப்புடன் அமைக்கப்பெற்ற கூண்டினுள் ஏற்றி அனுப்பினர். அவர் விண்வெளி உடிை (Space suit) அணிந்திருந்தார். கூண்டினுள் உயிர் வாழ்க்கைக்குத் தேவையான எல்லாச் சூழ்நிலைகளும் அமைக்கப்பெற்றிருந்தன. இராக்கெட்டு மேல் நோக்கிப் போகும்போது அவரது எடை பதிளுெரு மடங்காக அதிகரித்தது. 144 கி. மீ. உயரத்தில் இராக்கெட்டிலிருந்து கழன்ற துணைக்கோள் 184 கி மீ. உயரம் வரை வளைந்து சென்று தரையை நோக்கி இறங்கியது. வளைவில் சென்ற பொழுது செப்பர்டு எடையின்மையை அனுபவித்தார். திரும்பும்பொழுது அவர் மூன்று பின்னியங்கும் இராக் கெட்டுகளை இயக்கி விண்வெளிக் கலத்தின் வேகத்தைத் தனித்தார். இறங்கும்பொழுதும் எடை மிகுதி ஏற்பட்டது. அப்பொழுது கண்களே மூடிய நிலையில் இருந்தார் செப்பர்டு. அவரது செயல்களேத் தொலைக்காட்சிமூலம் தரையிலிருந் தவர்கள் கண்டனர். இறுதியாக அவர் சென்ற துணைக்கோள் அட்லாண்டிக் மாகடலில் விழுந்தது. மீட்புக் குழுவினர் அதனை மீட்டனர். இதுகாறும் நடைபெற்ற சோதனைகளில் குரங்குகளும் மனிதனும் விண்வெளியில் ஒரு குறிப்பிட்ட உயரம் சென்று மீண்டனரேயன் றிப் பூமியைச் சுற்றி வலம் வரவில்லை என்பது அறியத்தக்கது. -