பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 தொல் உலகச் செலவு பூமியை வட்டமிடும் முயற்சிகள் : அடுத்து நாசா இயக்கத் தினர் துணைக்கோள் பூமியை வட்டமிடச் செய்யும் முயற்சிகளே மேற்கொண்டனர். ஈளுேஸ் என்னும் ஒரு மனிதக் குரங்கை ஒரு கூண்டினுள் வைத்து அதனைப் பூமியை வட்டமிடுமாறு: இயக்கினர். அது அட்லாஸ் (Atlas) என்ற இராக்கத இராக்கெட்டால் இயக்கப்பெற்றது. அந்த இராக்கெட்டின் உயரம் 27.9 மீட்டர்; எடை 125 டன். மனிதக் குரங்கு இருந்த கூண்டினுள் உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத வசதிகள் நிலவச் செய்யப் பெற்றிருந்தன. கூண்டு பூமியை மூன்று சுற்றுகள் சுற்றுமாறு திட்டமிடப் பெற்றிருந்தது. ஆயினும், அதிலுள்ள கருவிகளில் நேரிட்ட கோளாறுகளே அறிந்து இரண்டு சுற்றுகள் நிறைவுபெறுவதற்குள் அதனைத் தரையில் இறக்கும் முயற்சிக்னே மேற்கொண்டனர். தரை தளத்தினின்றும் அனுப்பப்பெற்ற ஒரு வாஞெலிக் கட்டளை கூண்டிலிருந்த பின்னியங்கு இராக்கெட்டினை (Retro rocket) இயக்கியது. கூண்டு செல்லும் திசையை நோக்கிப் பொருத்தப் பெற்றிருந்த அதன் வால் பகுதியில் வெளியேறிய வாயுப்பீறல் கூண்டினைப் பின்ளுேக்கி உந்தியது. ஆகவே, கூண்டின் வேகம் தணிந்து அது பூமியை நோக்கி இறங்கியது. ஒரு குறிப்பிட்ட உயரத்தில் முன் அமைத்த ஏற்பாடொன்ருல் ஒரு குதி கெர்டை வெளிவந்து துணைக்கோள் அதில் தொங்கியது. காற்றின் உராய்வால் கலத்தின் வேகம் குறைந்து கடைசியாகக் கடலில் வந்திறங்கியது. உடனே அது மீட்புக் குழுவினரால் மீட்கப் பெற்றது. உள்ளிருந்த மனிதக் குரங்கு யாதோர் ஊறும் ஏற்படாமல் நலமாகவே இருந்தது. இந்த வெற்றியைக் கண்ட அறிவியலறிஞர்கள் அடுத்து மனிதனைக் கொண்ட துணைக்கோளை இயக்கும் முயற்சியில் கவனம் செலுத்தத் தொடங்கினர். - 9. 1981ஆம் ஆண்டு இவம்பர் 29ஆம் நாள்.