பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்புலிப் பயணம் 盘盛置 இயக்கினர். விண்கலம் மேல்நோக்கிக் கிளம்பி விரைவில் அதன் ஈர்ப்புவிசையினின்றும் விடுபட்டுப் பூமியை நோக்கி விரைந்தது. மணிக்கு 8,736 கி. மீட்டர் வேகத்தில் அது வந்து கொண்டிருந்தது. இந்த விண்கலத்திலும் இரு பகுதிகள் இருந்தன. பூமியைச் சுற்றியுள்ள வளிமண்டலத்தை நெருங்குவதற்குச் சற்று முன்னதாகத் தேவையற்ற ஒரு பகுதியைக் (பணிப்பகுதியை) கழற்றிவிட்டனர். அது வாயு மண்டலத்தைத் தாண்டும்போது எரிந்து சாம்பசாகிவிட்டது. விண்வெளி வீரர்கள் அமர்ந்திருந்த பகுதி மட்டிலும் மணிக்கு 40,000 கி. மீ. வேகத்தில் பூமியை நெருங்கியது. இந்தக் கலம் வெப்ப மடைந்து எரிந்து சாம்பராகாதிருக்க வெப்பத் தடுப்புக் கவசம் ஒன்றிருந்தது. விண்கலம் 0ே00°F வெப்பத்துடன் பழுக்கக் காய்ச்சியது போன்றிருந் தாலும், வீரர்கள் இருந்த அறை குளிர்ச்சியாகவே (81°F) இருந்தது. விண்கலம் பூமியிலிருந்து 7.2 கி. மீட்டர் உயரத்திலிருந்த போது இரண்டு குதி குடைகள் விரிந்து கொடுத்துக் கலத்தின் வேகத்தைத் தணித்தன. 8 கி. மீட்டர் உயரத்தில் மேலும் மூன்று குதி குடைகள் விரிந்து கொடுத்தன. இதனுல் விண்கலம் அதிக அதிர்ச்சியின்றிப் பசிபிக் மாகடலில் குறிப்பிட்ட இடத்தில் வந்து விழுந்தது. வட்டமிட்ட வண்ண மிருந்த ஹெலிகாஃப்டர் விமானங்களுள் ஒன்று விண்வெளி வீரர்களை மீட்டு அருகிலிருந்த போர்க் கப்பலில் கொண்டு போய்ச் சேர்த்தது. மாலுமிகள் விண்கலத்தைப் பாதுகாக்கும் பொறுப்பேற்றனர். :* விண்வெளிப் பயணம் தொடங்கினபோது 86 மாடிக் கட்டடத்தின் உயரம் இருந்த அமைப்பு அப் பயணம் திறைவுபெற்றபோது 3,425 மீட்டர் உயரமுள்ள விண்கலம் மட்டிலுமே எஞ்சி நின்றது ! .