பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ió4 தொலை உலகச் செலவு விமான நிலையங்கள்போல மிகச் சாதாரணமானவையாக ஆகி விட்டாலும் நாம் வியப்படைவதற்கில்லை. இதுகாறும் தயாரிக்கப் பெற்ற விண்வெளி நிலையத் திட்டங்களில் டாக்டர், டாரெல் சி. ரோமிக்' என்பார் தயாரித்த திட்டம் தான் சிறந்ததெனக் கருதுகின்றனர் நிபுணர்கள். அவர் கருத்துப்படி விண்வெளி திலையத்தை விருப்பப்படி பெருக்கிக் கொள்ளலாம். அவர் 450 மீ. நீளமும் 150 மீ. அகலமும் உள்ள நிலையத்தை அமைக்கலாம் என்று யோசனை கூறுகின்ருர். மனிதர்கள் வாழும் பகுதி 300 மீ. குறுக்களவாகச் செய்யலாம் என்பது அவரது திட்டம். இத்தகைய நிலையத்தில் அறிவியலறிஞர்கள் துண்துறைவிற்புன்னர்கள் (Technicians), பார்வையாளர்கள் ஆகியோர் 5000 பேருக்கு இடம் கிடைக்கும். நிலயத்தின் ஒரு பகுதியில் பூமியிலிருந்து வரும் இராக்கெட்டுகள் இறங்கும் தளமாக இருக்கும். விரைந்து வளரும் அறிவியலின் அதிசயமான செயல்களை யார்தாம் அறுதியிட முடியும் இதுகாறும் அமெரிக்காவும் இரஷ்யாவும் விண்வெளிக்குத் தேர்த்தெடுத்தவர்கள் யாவரும் விமானப் படையைச் சேர்ந்தவர்களே. இவர்கள் தனிப்பட்ட முறையில் பயிற்சி அளிக்கப்பெற்றுக் கடினமானவும் அபாயகரமுமான செயல்கட் கும் பயன்படுத்தப் பெற்றனர். ஆளுல், அமெரிக்காவில் இளம் அறிவியலறிஞர்களையும், வசன நூல் வல்லுநர்களையும் தேர்ந் தெடுத்து அவர்கட்குப் பயிற்சி அளிக்கும் செயல் ஏற்கெனவே தொடங்கப் பெற்றுவிட்டது. இவர்கள்தாம் எதிர்காலத்தில் விண்வெளிக்கு அனுப்பப்பெறுவர். அறிவுச் செல்வத்திற்கென விண்வெளி ஆராய்ச்சி மேற்கொள்ளப் பெறுமா லறிஞர்கள்தாம் தம் பணியைத் திறமையுடன் இயலும், அமெரிக்காவில் சில பல்கலைக் கழகங்களில் 1ணி அறிவியல் (Space Science), விண்வெளிப் பொறியியல் utics) பாடத் திட்டங்களிலும் சேர்க்கப் பெற்றுள்ளன.