பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 இன்னும் அவர் எழுத்திலக்கணத்தைக் கருவி, செய்கை &T GUT இரண்டு வகையாகப் பகுத்துக் கொண்டு இவ்விரண்டையும் தனித்தனிப் புறப்புறம், புறம், அகப்புறம், அகம் என வகைப்படுத்திப் பின் விளக்கிக் காட்டலும் திறனாய்வு முறையாகும். இஃதே போல் இளம்பூரணர் சொல்லதிகாரமுகத்தே சொல் எனைத்து வகையான் உணர்த்தினானோவெனின்? எட்டுவகைப்பட்ட இலக்கணத்தான் உணர்த்தினான் என்க." அவையாவன இரண்டு திணை வகுத்து, அத்திணைக் கண் ஐந்து பால் வகுத்து, எழுவகை வழு வகுத்து, எட்டு வேற்றுமை வகுத்து, அறுவகை ஒட்டு வகுத்து, மூன்று இடம் வகுத்து, மூன்று காலம் வகுத்து இரண்டு இடத்தான் ஆராய்ந்தான் என்பர். இவ்விரண்டு அதிகாரத்தும் உணர்த்தினாற்போலவே பொருளதிகார முகத்தும் "இவ்வதிகாரத்துள் உரைக்கின்ற பொருளை யாங்ங்னம் உணர்த்தினாரோவெனின், முற்பட இன்பப் பகுதியாகிய கைக்கிளை முதலாகப் பெருந்திணை ஈறாக அகப்பொருள் இலக்கணம் உணர்த்தி, அதன்பின் புறப்பொருட்பகுதியாகிய வெட்சி முதலாகப் பாடாண்டினை ஈறாகப் புறப்பொருள் இலக்கணம் உணர்த்தி, அதன்பின் அகப்பொருட் பகுதியாகிய களவியல் கற்பியல் என இரண்டு வகைக் கைகோளும் உணர்த்தி, அதன்பின் அகம் புறம் என இரண்டினையும் பற்றி வரும் பொருளியல்பு உணர்த்தி, அதன்பின் அவ்விரு பொருட் கண்ணும் குறிப்புப் பற்றி நிகழும் மெய்ப்பாடு உணர்த்தி, அதன்பின் வடிவும் தொழிலும் பண்பும் பயனும் பற்றி உவமிக்கப்படும் உவமவியல் உணர்த்தி அதன்பின் எல்லாப் "வேற்றுமை யெட்டுந் திணையிரண்டும் பாலைந்தும் மாற்றுதற் கொத்த வழுவேழும் - ஆறொட்டும் ஏற்றமுக் காலமிட மூன்றோ டிரண்டிடத்தால் தோற்ற வுரைப்பதாஞ் சொல்." . இவ்வண்ணம் எட்டுவகைப்படுத்திச் சொல்லாராய்ந்தார் தொல்காப்பியனார் என்பர் வீரசோழியவுரையாசிரியர்.