பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 திறனாய்வு செய்பவருக்கு நூலாசிரியன் கூறும் ஒவ்வொன்றும் பொருந்துமா? பொருந்தாதாயின் அதற்குக் காரணம் எதுவாக இருத்தல் வேண்டும்? என்று ஆய்ந்து உண்மையைக் கூறுதல் கடமையாதலின், அவ்வறி வினையுடைய இளம்பூரணர் ஒரு வினாவை எழுப்பிக் கொண்டு அதற்கு விடைதருதலைக் காண்போம். பாங்கன் முதலாயினாரை, "எஞ்சியோர்க்கும் எஞ்சுத லிலவே' (45) என்னும் இச்சூத்திரத்தால் ஆசிரியர் கூறுப. ஆனால், தலைமகள் கூற்று தனித்துக் கூறல் வேண்டும். ஏன் ஏனில், தலைவி இவரோடு ஒரு நிகரன்மையின் எனின், அது ஒக்கும் தலைமகள் கூற்று உணர்த்திய சூத்திரம் காலப்பழமையால் பெயர்த்தெழுதுவார் விழ எழுதினார் போலும், என்று கூறியுள்ளார். இக்காலத்திலே திறனாய்வு செய்பவர் எடுத்த உடனே நூலாசிரியர் மேல் அது குற்றம், இது குற்றம் என்று பல்வகைக் குற்றத்தைச் சுமத்தி, அறியாமைப் பட்டம் கட்டி விடுதலையும் பார்க்கிறோம். இளம்பூரணர் அவ்வாறு கூற விரும்பவில்லை. அகத்தினையியலில் தொல்காப்பியர் கூறும் உள்ளுறை உவமம் என்பது பலரையும் பலவாறு குழப்பி விடும் ஒன்றாக உள்ளது. அதனை இளம்பூரணர் தெளிவு படுத்திச் செல்கின்றார். தொல்காப்பியர் உவம இயலின் உவமைக்கு இலக்கணம் கூறினாலும், முன்னே அகத்திணையியலில் அவற்றை நான்கு நூற்பாவால் கூறி யுள்ளார். அவற்றைக் கீழே காண்க. 'உள்ளுறை யுவமம் ஏனை யுவமமெனத் தள்ளா தாகும் திணையுணர் வகையே" (49) 'உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலமெனக் கொள்ளும் என்ப குறியறிந் தோரே" (50) 'உள்ளுறுத் திதனோ டொத்துப்பொருள் முடிகென உள்ளுறுத் துரைப்பதே உள்ளுறை யுவமம்" (51) 'ஏனை யுவமந் தானுணர் வகைத்தே" (52)