பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 ஐந்திணைக் காமம் காமம் என்ற குணத்திலிருந்தே உலகத்திலுள்ள எல்லாப் பொருளும் தோன்றுகின்றன என்று தொல் காப்பியர் கருதுகின்றார். அவர் அகத்திணை புறத்திணை என இரண்டு திணை வகுத்துக்கொண்டு அகத்திணையில் ஒருபாற் காமமாகிய கைக்கிளையையும் ஒத்த அன்பு பற்றித் தோன்றும் ஐந்திணையையும் ஒவ்வாக் காமமாகிய பெருந்திணையையும் புறத்திணையில் இக்காமங்கட்குப் புறமாகக் கருதப்பெறும் வெட்சி முதலாகிய புறத்திணை ஏழனையும் கூறுகின்றார். புறத்திணை ஏழற்கும் அகத்திணை ஏழும் அகம் என்பது அவர் கருத்தாகும். அகத்திணையை ஏனைப் புறத்திணையைக் காட்டிலும் அவர் மிக்க சிறப்பான பொருளாகக் கருதுகின்றார். - மிக்க பொருளினுள் பொருள்வகை புணர்க்க நானுத் தலைப்பிரியா நல்வழிப் படுத்தே (தொல், பொருள். பொருளியல் - 23) என்னும் மேற்கண்ட நூற்பாவுரையில் இளம்பூரணர் மிக்க பொருள் என்றதை அகப்பொருள் என்று கூறுமாறு காண்க. மிக்க பொருளாகிய அகத்தினை ஏழும் ஐந்திணைக் காமத்தையே தொல்காப்பியர் மிகமிகச் சிறந்த பொருளாகக் கருதுகின்றார். அவர் அகத்திணையியலில் கைக்கிளை, ஐந்திணை, பெருந்திணை என்று தொடங்கி, ஐந்திணைக் காமத்தினையே மிகுதியான நூற்பாக்களால் கூறுகின்றார். பின்னர் ஐந்திணைக் காமத்தின் கைகோள்களாகிய களவு, கற்பு என்னும் இரண்டனைக் களவியல், கற்பியல் எனத் தனி இயல்களால் உணர்த்துகின்றார். இவற்றிலே சொல்லாது எஞ்சிய ஐந்தினைச் செய்திகள் பலவற்றைப் பொருளியலிலும் கூறுகின்றார். மெய்ப்பாடென்பது அகத்திணை, 1. நச்சினார்க்கினியர் வேறுபொருள் கூறுவர்.