பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 என்றும், கற்பியலில் "கழிவினும் நிகழ்வினும் எதிர்வினும் வழிகொள நல்லவை உணர்த்தலும் அல்லவை கடிதலும் (செவிலிக்கே யன்றி) அறிவர்க்கும் உரிய என்றும்" கூறி, "இடித்துவரை நிறுத்தலும் அவரது ஆகும்" (நூற். கற்பி. 16) என்றும் கூறுகின்றார். மேற்காட்டிய நூற்பாக்களிலிருந்து அறிவரென்பார் குற்றமில்லாத செய்திகளை இறந்த காலத்திலும், செய்தார், நிகழ்காலத்தில் செய்கின்றார், எதிர்காலத்திலும் செய்வார் என்பதும், தலைவன், தலைவியர்க்கு, இறந்த காலத்திலும், நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் அல்லவை கடிந்து, கடிகின்ற, கடியும் நல்லவை உரைத்து, உரைக்கின்ற உரைக்கும் இயல்பினரென்றும், அத்தலைவன் தலைவியர் இவற்றிற்கெல்லாம் திருந்தாதவிடத்து இடித்துக் கூறியாவது நன்னெறிக்கண் நிறுத்துவர் என்றும் அறிந்து கொள் கின்றோம். பல்புகழ் நிறுத்த படிமையோன் என்றும், ஒல்காப் புலமைத் தொல்காப்பியனென்றும், புகழ்ந்தோதப்பட்ட தொல்காப்பியரும் அறிவராதலால், உலக நடைமுறை எதுவாயிருப்பினும் நல்லதைச் சொல்லுதல் அவர் கடமை யாயிற்று. காமம் என்பது எல்லோருடைய உள்ளத்திலும் இருக்கின்றது. காமத்திற்குக் கண்ணில்லை என்றொரு பழமொழியும் வழங்குகின்றது. "காமம் வெகுளி மயக்கம் எனும் மூன்றின் நாமம் கெடக்கெடும் நோய்" என்று திருக்குறளாசிரியர் முழங்குகின்றார். காமத்தினையுடைய மக்கள் எத்தனையோ தவறான வழியில் இயங்குகின்றனர். எத்தனையோ தீங்குகள் காமத்தால் அன்றும் நடந்தன. இன்றும் நடக்கின்றன. இவ்வாறு எல்லாக் கேட்டிற்கும் காரணமாகிய கைக்கிளை பெருந்திணைக்காமங்கள் உலகில் பெருவழக்காக இருத்தலால் அவற்றைத் தொல்காப்பியர் தம் நூலுள் ஒருசிறிதே குறிப்பிட்டுவிட்டு ஐந்திணைக்