பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 காமம் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிறுபான்மையாக நடப்பினும், அது நல்ல காமமாதலின் அதனையே எடுத்து மிகச்சிறப்பாகக் கூறுகின்றார். இதனாற் பயன், தீய காமப் பயிற்சியுடையோர் இதனைக் கற்றுத் திருந்துதலாகும். தொல்காப்பியமே போக்கறு பனுவல் தானே. காம உலகின் போக்கறவே தொல்காப்பியர் உயர்ந்த காமமாகிய ஐந்திணையைப் பாரித்து உரைத்தாரென்க. ஆழ்ந்த வளர்ச்சி இல்லாதவர், ஆழ்ந்த உணர்ச்சி இருந்தும் தொல்காப்பியத்திற்கு ஏற்றம் கற்பிக்கக்கூடாது என்று தேற்றமாகக் கருதிக்கொண்டிருப்பவர் என்றும் இவரெல்லாம் தொல்காப்பியத்தில் என்ன இருக்கின்றது? என்மனார் புலவர் என்பது தான் மிகுதியாக இருக்கின்றது என்று கூறிக்கொண்டிருப்பர். தொல்காப்பியர் கூறும் பொருளதிகாரத்தே உலகப்பொருள் அத்தனைக்கும் 1. தலைவன் தலைவி என்னும் இருபாலரிடத்தும் ஒத்த அன்பினால் தோன்றும் காமம் உலகில் நிகழாததன்று. இது H சிறுபான்மையாக நிகழும் ஆதலின் இது உலகியலே. இறைய னார் களவியலுரையாசிரியர், "இல்லது இனியது நல்லது என்று புலவரால் நாட்டப்பட்டதோர் ஒழுக்கமாதலின் இதனை உலக வழக்கத்தினோடு இயையான் என்பது" என்று கூறுவர். அது பொருத்தமன்று. நச்சினார்க்கினியர், "இஃது இல்லதெனப்படாது. உலகியலேயாம், உலகியலின் றேல் ஆகாயப்பூ நாறிற்றென்ற வழி அது சூடக் கருதுவாரு மின்றி மயங்கக் கூறினானென்று உலகம் இழிந்திடப் படுதலின், இதுவும் இழித்திடப்படும். இச்செய்யுள் வழக்கினை நாடக வழக்கென மேற்கூறினர். எவ்விடத்தும், எக்காலத்தும் ஒப்ப நிகழும் உலகியல் போலாது. உள்ளோன் தலைவனாக இல்லது புணர்த்தல் முதலாகப் புனைந்துரை வகையாற் கூறும் நாடக இலக்கணம் போல, யாதானு மொரோவழி ஒரு சாரார் மாட்டு உலகியலால் நிகழும் ஒழுக்கத்தினை, எல்லோர்க்கும் பொதுவாக்கி இடமும் காலமும் நியமித்துச் செய்யுள் செய்த ஒப்புமை நோக்கி" என்பர். - (தொல், அகத். - 3)