பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்" என்னும் பனம்பாரனார் செய்த தொல்காப்பியப் பாயிரத்தை எடுத்துக் கூறி விடை தருகிறோம். பிற்காலத்தில் வாழ்ந்த பாரதியாரும் நீலத் திரைக்கட லோரத்திலே - நின்று நித்தம் தவஞ்செய் குமரியெல்லை - வட மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ் மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு எனப் பனம்பாரனார் கூறியவாறே வடக்கே திருவேங்கட மலையையும் தெற்கே குமரியினையும் எல்லையாக்கிக் கூறுகின்றார். பனம்பாரனார் கூறியதற்கும் பாரதியார் கூறியதற்கும் ஒரு வேறுபாடுண்டு. அவர் தென்குமரி என்றது குமரியாற்றினை. இவர் குமரி என்றது குமரி முனையினை. அவர் குறித்த தென்குமரியாற்றின் தென்கரை வரை கடல் கொண்டுபோகப் பிற்காலத்தே குமரி முனையாயிற்று. பனம்பாரனார் கூறியது நிற்கட்டும். தொல்காப்பியர் எதனைத் தமிழ்நாடென்று கூறுகிறார் எனின், வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் நாற்பெயர் எல்லை அகத்தவர் வழங்கும் யாப்பின் வழியது என்மனார் புலவர் (செய்யுளியல்-75) என்று தொல்காப்பியர் கூறும் நூற்பாவைக் கருதி உணர்ந்தால், சேர சோழ பாண்டியர் என்னும் மூன்று முடிமன்னரான தமிழரசர் ஆண்ட நாடே தமிழ்நாடென்று கருத வேண்டியுள்ளது. சேரனாடு குடபுலம் என்றும், சோழனாடு குணபுலம் என்றும், பாண்டியனாடு தென்புலம் என்றும் இலக்கியங்களில் வழங்கப்படுகின்றன. செந்தமிழ் கொடுந்தமிழ் பனம்பாரனார் கூறிய பாயிரத்தில் செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு என்று கூறப்