பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 112 1. மாகவும், பாங்கி வாயிலாகவும் கூடியொழுகுவர். அவ்வாறின்றித் தாங்களே வாயிலாகக் களவொழுக்கத்தில்) கூடுவதும் உண்டு. காமக் கூட்டம் தனிமையிற் பொலிதலின் தாமே தூதுவ ராகலும் உரித்தே (களவியல் - 29) தலைவன் ஊடுதலும் உண்டு தலைமகன் பரத்தையிற் பிரிந்த காரணத்தால் தலைவிக்கு ஊடல் நிகழும். தலைவன் தன்மேல் தலைவி ஊடுதற்குக் காரணமில்லை என்று உணர்த்துவான். அவன் பலவகை யாலும் உணர்த்தியும் தலைவி ஊடல் நீங்காமலிருந்தால் அது காரணமாகத் தலைவனுக்கும் தலைவிமேல் புலவியும் ஊடலும் தோன்றும். இன்னும் களவுக்காலத்தில் தலைவி செய்த குறி பிழைத்தவிடத்தும் தலைமகனுக்குத் தலைவிமேல் புலவியும் ஊடலும் நிகழும். உணர்ப்புவரை யிறப்பினும் செய்குறி பிழைப்பினும் புலத்தலும் ஊடலும் கிழவோற் குரிய (கற்பியல் - 14) தலைமகனிடம் பணிந்த கிளவி = தலைமகனிடத்தில் பணிந்தொழுகுதல் தலைமகளுக்கு இயல்பான பண்பாகும். பெருமையும் உரனும் உள்ள தலைமகனானவன் தனக்குக் காமம் கைகடந்தபொழுது தலைவியினிடத்தே பணிந்து கூறும் சொல்லையும் கூறுதற் குரியன். காமக் கடப்பினுள் பணிந்த கிளவி கானுங் காலைக் கிழவோற் குரித்தே வழிபடு கிழமை அவட்கிய லான (கற்பியல் - 19) தலைவன் பழைய காலத்து நிகழ்ச்சியைக் கருதிக் கலங்கலும் செய்வன். தலைமகன் ஐந்திணைக் காமத்தாற் கொண்ட தலைவி யிருக்கவும் பின்முறையாக ஆக்கிய பெரும் பொருள் விளைக்கும் வதுவையை (இரண்டாம் திருமணம்) நிகழ்த்திய