பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 தலைமகன் கடல்வழியாகப் பிரியும்பொழுது தலைவியை அழைத்துச் செல்வான் என்றல் தலைமகன் பிரியும் பிரிவு காலிற் பிரிதலென்றும் கலத்தில் பிரிதல் என்றும் (கலம் - மரக்கலம், கப்பல்) இருவகைப்படும். அவற்றுள் காலத்திற் பிரியுங் காலத்துத் தலைவியை உடன் கொண்டு பிரியான் என்பதை, முந்நீர் வழக்கம் மகடூஉவோ டில்லை (அகத் 37) என்னும் நூற்பா உணர்த்துகிறது. தலைவன் தலைவி முன் தன்னைப் புகழ்ந்து கூறும் இடம் ஒருவர் பிறரால் புகழப்படுமாறு வாழ வேண்டும். அவர் தன்னைத்தானே புகழ்ந்து கொள்ளுதல் கூடாது. மன்னுடை மன்றத் தோலைத் தூக்கினும் மன்னிய அவையிடை வெல்லுறு பொழுதினும் தன்னுடை ஆற்றல் உணரா ரிடையினும் தன்னை மறுத்தலை பழித்த காலையும் தன்னைப் புகழ்தலும் தகும்புல வோற்கே 1. முந்நீர் வழக்கம்' என்னும் நூற்பாவிற்கு நச்சினார்க்கினியர் "ஒதலும் துதும் பொருளுமாகிய மூன்று நீர்மையாற் செல்லுஞ் செலவு தலைவியோடு கூடச் சேறலின்று" என்று உரை கூறி, இந்நூற்பாவிற்குப் பொருள் வயிற் பிரிவின்கண் கலத்திற் பிரிவு தலைவியுடன் சேரவில்லை. எனவே காலிற் பிரிவு தலைவியுடன் சேறல் உண்டு என்று பொருள் கூறுவார்க்குச் சான்றோர் செய்த புலனெறி வழக்கம் இன்மை உணர்க" என மறுப்பர். ஆனால் தலைவியுடன் தலைவன் காலிற் பிரிவுண்டென்பதையும் அவ்வாறு பிரிந்த காலத்தே தலைமகன் சுரவழியிடத்தே இறந்து போன செய்தியையும் "நனிமிகு சுரத்திடைக் கணவனை இழந்து தனிமகள் புலம்பிய முதுபாலையும்" (புறத்திணை-24) என்னும் பகுதியால் கருதியுணரலாம்.