பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117 களவொழுக்கம் நிகழ்த்துமிடத்துத் தேரும் யானையும்' குதிரையும் பிறவும் ஊர்ந்து இயங்குவர் என்று தொல் காப்பியர் கூறுவதால் இத்தலைவரின் செல்வக் குறை பாடின்மையைக் கூறுகின்றார். தலைவன் தலைவி இருவரும் ஒருவரை ஒருவர் புகழ்ந்து கொள்ளுதல் புகழ் என்பது ஒருவரை ஒருவர் உயர்த்திக் கூறுவது. இகழ் என்பது தாழ்த்திக் கூறும் பழிமொழி. ஒவ்வாக் காமமாகிய கைக்கிளை பெருந்திணைத் தலைமக்களுள்ளே ஒருவரை ஒருவர் பழித்துக் கூறுதலே இடம் பெறும். ஆனால், ஐந்திணைக் காமத் தலைமக்களிடத்தில் புறமொழி வன்சொல் முதலியன நிகழா என்ற செய்தி முன்னே கூறப்பட்டது. ஆனால் ஒருவரை ஒருவர் புகழ்ந்து கூறும் கிளவி தோன்றும். அது எப்பொழுது என்னில் நற்குணம் நிகழுமிடத்தென்க. நிகழ்தகை மருங்கின் வேட்கை மிகுதியில் புகழ்தகை வரையார் கற்பி னுள்ளே என்னும் நூற்பா கூறுகின்றது. இந்நூற்பாவிற்குப் பொருள் கூறுமிடத்தே தகை நிகழ் மருங்கின் என்று சொல்லை மாற்றித் தகை' என்பதன் பொருளை அருளும் குணமும் தளர்வும் தகையே' என்னும் பிங்கல நிகண்டால் அறிந்து கொள்ளலாம். தலைவன் தலைவியரிடத்தே நிகழும் புகழ்ச்சி கற்புக்கால நிகழ்ச்சியாகும். இப்புகழ்ச்சி ஒருவருக்கொருவர் எழுச்சியை ஊட்டுவதாக அமையும். ஐந்திணைக் காமத் தலைவி இனி ஐந்திணைக் காமத் தலைவியின் இயல்பினை ஆராய்வோம். தலைமகனுக்குப் பெருமையும் உரனும் வேண்டும் என்று மேலே கூறினோம். அது போலவே 1. தேரும் யானையும் குதிரையும் பிறவும் ஊர்ந்தனர் இயங்கலும் உரியர் என்ப (தொல். பொருளியல் - 18)