பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 இவ்வெற்றி நிலையைத் தொல்காப்பியர் வாகை என்று குறிப்பிட்டு அதனைப் பாலை என்னும் அகத்திணையின் புறன் என்று கூறுகிறார். பிறரெல்லாம் "போர்க்களத்து மிக்கோர் செருவென்றது வாகையாம்" என்று அரசர்க்குரியதாகக் கூறியுள்ளார். ஆனால், தொல்காப்பியர் அவ்வாறு கூறாது, வாகை தானே பாலையது புறனே தாவில் கொள்கைத் தத்தம் கூற்றைப் பாகுபட மிகுதிப் படுத்தல் என்ப (புறத்திணையியல் - 15) "வாகை என்னும் புறத்தினைதான் பாலை என்னும் அகத்திணையின் புறனாகும்; அது உலகத்திலுள்ள ஒவ்வொரு வரும் குற்றமில்லாத கொள்கையையுடைய தம்தம் தொழிற் கூறுபாட்டை வகைபட மிகுதிப்படுத்திக் காட்டுதலாகும்" என்று உலகமக்கள் எல்லோருக்கும் பொதுவாக ஒதி யுள்ளனர். அவர்தம் காலத்திலிருந்த மக்கள் நிலையைக் கருத்தில் வைத்துக் கொண்டு, பார்ப்பனரும், அரசரும், வணிகரும், வேளாளரும், அறிவனும், தாபதரும், பொருநரும், இவர்தவிர நாட்டிலுள்ள ஏனைய மக்களும் ஆகிய நாட்டுவாழ் மக்கள் எல்லோரும் குற்றமில்லாத கொள்கையை யுடைய தம்தம் தொழிற்கூறுபாட்டைப் பாகுபட மிகுதி படுத்திக் காட்டுதலே வாகை என்பதாகும் என்று கூறுவது, மிகச் சிறந்த, உலகத்திற்கு உயிரான கொள்கையாம். உலகியல் நிமித்தம் பொருள் மரபில் இவர் கூறும் வாகைத்திணைப் பொருள் மிகச் சிறந்ததாகும். பார்ப்பனர் ஓதல் ஒதுவித்தல் வேட்டல் வேட்பித்தல் ஈதல் ஏற்றல் என்பனவற்றில் மிகுதலும், நாட்டையாளும் அரசர், ஒதலும், வேட்டலும் ஈதலும் படை வழங்குதலும் குடியோம்புதலும் ஆகிய இவற்றில் மிகுதலும், வாணிகர் ஓதல் வேட்டல் ஈதல் உழவு வாணிகம் நிரையோம்புதல் என்னும் தொழிலில் மிகுதலும்,