பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137 வேளாளர் உழவு, ஏனைய தொழில், விருந்தோம்பல், பகடு புறந்தருதல், தொண்டு செய்தல், கல்வி கற்றல் என்னும் இத்தொழிலில் மிகுதலும், அறிவன் குற்றமில்லாத நல்லொழுக்கத்தை மூன்று காலத்திலும் செய்து அதனின் மிகுதலும், தாபதர் தங்கள் தவ ஒழுக்கத்தில் மிகுதலும், போர் செய்வோர் தங்கள் செயலில் மிகுதலும் ஏனையோர் தம்தம் செயலில் மிகுதலும் ஆகிய இவையெல்லாம் வாகை என்பர். பிங்கலநிகண்டும், கல்வியிற் வேள்வியிற் கொடையிற் படையில் வெல்லுநர் அணிவது வாகை யாகும் என்று கூறுகின்றது. இவற்றால் வாகைத்தினை அரசர்க்கே யன்றி எல்லோருக்கும் உரிமையாதல் விளங்கும். வாகைத்திணையின் பின் பெருந்திணை என்னும் அகத்திணையின்புறனாகக், காஞ்சி என்னும் புறத்திணையைத் தொல்காப்பியர் கூறுகின்றார். இது பல்வகை நிலை யாமையைப் பொருளாக உடையது. தொல்காப்பியர், காஞ்சி தானே பெருந்திணைப் புறனே பாங்கருஞ் சிறப்பின் பன்னெறி யானும் நில்லா வுலகம் புல்லிய நெறித்தே என்று கூறுகிறார். பெருந்திணை என்னும் அகத்திணைக்குக் காஞ்சி என்னும் திணை புறனாம்; அது பாங்காதல் அரிய சிறப்பினால் பலநெறியாலும் நிலைபேறில்லாத உலக நிலையைப் பொருந்திய நெறியை உடைத்து என்பர். தொல்காப்பியர் இத்திணையிற் கூறியுள்ள இருபது துறைகளை இளமை நிலையாமை செல்வம் நிலையாமை யாக்கை நிலையாமை என மூன்று வகையுள் அடக்குகிறார் இளம்பூரணர். பெருந்திணைக்குக் காஞ்சித்திணை புறனாயவாறு என்னை யெனின்? ஏறிய மடற்றிறம் (அகத்திணை - 54) முதலாகிய நோந்திறக் காமப்பகுதி (பெருந் திணைக்குரியவை) அகத்திணை ஐந்தற்கும் புறனாயவாறு