பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 பாடுபொருளைக் குறிப்பிடாமல் பாடற்கு இலக்கணம் சொல்வது நன்றன்று பாடற்கு இலக்கணம் கூறுங்கால் பாடுபொருளைக் குறிப்பிட்டே இலக்கணம் சொல்லவேண்டும். அப் பொருளைக் குறிப்பிடாமல் எழுத்து அசை சீர்தளை தொடை அடிகளால் ஆனது பாட்டு அல்லது செய்யுள் என்று மட்டும் இலக்கணம் கூறின் மூட்டை என்பது எப்படியிருக்கும் என்று வினாவியவனுக்கு உள்ளே ஒரு பொருளையோ பல பொருளையோ வைத்து சாக்கு முதலானவற்றால் மூடிக்கட்டியது மூட்டை என்று கூறாமல், சனல் நாரினால் இழைக்கப்பட்ட இழையால் செய்யப் பட்டுள்ள சாக்கின் வடிவமாயிருப்பது மூட்டை என்று சொல்வதைப் போன்றதாம். பாட்டு அல்லது பா பாட்டு அல்லது பா என்றால் பொருள் என்ன? என்பதை நாம் ஆராய முற்படுவோம். தொல்காப்பியர் செய்யுட்குச் சிறந்த உறுப்பாக இருபத்தாறு உறுப்புக்களைக் கூறியுள்ளார். அவற்றுள் எட்டாவது உறுப்பு தூக்கு என்பதாகும். பதினோராவது உறுப்பு பா என்பதாகும். பேராசிரியர் உரை மேலே கூறிய துக்கு, பா என்னும் இரண்டுள் துரக்கு என்பது பாக்களைத் துணித்து நிறுத்துதல் என்றும் பா என்பது சேட்புலத்திருந்த காலத்தும் ஒருத்தன் எழுத்தும் சொல்லும் தெரியாமல் பாடம் ஒதுங்கால் அவன் சொல்லு கின்ற செய்யுளை விகற்பித்து இன்ன செய்யுளென்று உணர்தற்கேதுவாகிப் பரந்துபட்டுச் செல்வதோர் ஒசை என்றும் அவற்றிற்கு விளக்கங்கூறியுள்ளார் பேராசிரியர்.இவர் கூறுவது பொருந்துமா என்பதை ஆராய்வோம். து.ாக்கு தொல்காப்பியர் 'துரக்கு என்னும் உறுப்பினைப் பற்றி ஏழு நூற்பா கூறியுள்ளார். அவை வருமாறு: