பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 செய்யுள் வழக்கு தோற்றுவாய் - மொழி வழக்கு இருவகை உலக வழக்கும் செய்யுள் வழக்கும் என மொழியின் வழங்குகள் இரு வகைப்படும். இவ்விருவகை வழங்குகளை "செய்யுள் ம்ருங்கினும் வழக்கியல் மருங்கினும்" (தொல் எச்சவியல் - 67) "கிளந்த வல்ல செய்யுளும் திரிநவும் வழக்கியன் மருங்கின் மருவொடு திரிநவும்" என்று (குற்றியலுகரம் - 77) தொல்காப்பியம் குறிப்பிடுவதைக் காணலாம். இவ் விரண்டால் உலகவழக்கென்பது பேச்சு வழக்காம். ஒருவன் பேசத் தொடங்கிய காலத்திலிருந்து தன்னைச் சார்ந்துள்ள மக்கள் பேசும் வகையினைக் கேட்டுக் கேட்டுத் தன் உள்ளத்திலே பதியவைத்துக் கொள்கிறான். வேண்டிய பொழுது அம்முறைப்படி பேசத் தொடங்குகிறான். பேச்சு வழக்குத் தோன்றுதற்குரிய இடம் பேசுமவன் வாழுமிடத்தின் சுற்றுச் சார்பும், அவனுடைய உள்ளமுமாகும். உலகவழக்கு பேச்சுவடிவத்திலிருக்கும். செய்யுள் வழக்கு எழுதப்பட்ட ஏட்டு வடிவத்திலிருக்கும் பேச்சு வழக்குப் பேசுபவன் வாழும் காலம் வரையிருக்கும். ஏட்டு வழக்கோவெனின் வெகுகாலம் வரை வாழ்ந்திருக்கும். செய்யுள் வழக்கு மேலே கூறிய இரண்டில் செய்யுள் வழக்கினை ஆராய்வோம். தன் கருத்தைப் பிறர்க்கு உணர்த்தவும் பிறர் கருத்தைத் தான் உணர்ந்து கொள்வதற்கும் மொழி கருவியாகும். அங்ங்னமாயின் பேச்சுவழக்கு செய்யுள் வழக்கு என்னும் இரண்டிற்கும் கருத்துணர்வே முக்கியப்பொருளாக உள்ளது. கருத்துணர்வைப் பொருளுணர்ச்சி என்றும் கூறலாம் பல்வகைத் தாதுவின் உயிர்க்குடல் போற்பல சொல்லாற் பொருட்கிட னாக உணர்வின் வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள் என்னும் நன்னூல் நூற்பா (267) இருவகை வழக்கில் செய்யுள் வழக்கினைச் செப்புகிறது. பலவகைத் தாதுப்