பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 அப்புலமையுடையார் புலவராவார். அவருள் கவி செய்வோர் கவிஞர் என்று வழங்கப்படுவார். அரிய பொருளை எளிய நடையில் உரைப்பவர் கமகன் என்று கூறப்படுவான். மேற்கோளும் ஏதுவும் எடுத்துக் காட்டித் தன் கொள்கையை நிலைநாட்டிப் பிறர் கொள்கையை மறுப்பவன் வாதி எனப்படுவான். அறம் பொருள் இன்பம் வீடெனும் உறுதிப் பொருள்களை உலகமக்கள் விரும்பிக் கேட்டுப் பயனடையுமாறு சொற்பொழிவாற்றும் திறம் படைத்தவன் வாக்கியாவன். அவர்களுள் ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்னும் நான்கு வகைப் பாடல்களைப் பாடுவோன் கவிஞன், பாவலன் என்று கூறப்படுவான். அக்கவிஞருள் ஒருவன் இன்னபொருளில் இன்ன பாவில் இன்னவாறு பாடுக எனக் கூறியவுடன் அவன் கேட்டுக் கொண்டவாறு விரைந்து பாடுவோன் ஆசுகவியாகும். பொருட்பொலிவும் சொல்திறனும் தொடையும் தொடை விகற்பமும் பொருந்தி நிற்க உருவகம் முதலிய அலங் காரத்தோடு ஒசைப் பொலிவுடைத்தாய் உய்த்துணர்வோர்க்கு அமிழ்தம்போல் இனிக்குமாறு பாடவல்லவன் மதுரகவியாகும். மாலைமாற்று முதலிய சித்திர கவிகளைப் பாடுவோன் சித்திர கவியாகும். சிற்றிலக்கியம் பேரிலக்கியம் முதலான இலக்கியங்களையெல்லாம் விரித்துப் பாட வல்லோன் வித்தாரகவி அல்லது அகலக்கவி யாகும். புலமையுடையவரை இவ்வாறு பலவகையினராகத் தோன்று 1. ஞாபகம் செம்பொருள் நடையினெப் பொருளும் காசின் றுரைப்போன் கமக னாவான் (51 . 3) பிங்கலம் 2. ஏதுவும் மேற்கோளும் எடுத்துக் காட்டித் தன்கோ னிறீஇப் பிறர்கோண் மறுப்போன் மன்பதை மதித்த வாக்கி யாகும் (52 - 3) பிங்கலம் 3. அறம் பொருள் இன்பம் வீடெனும் திறங்கள் கேட்க வேட்க இனியன கூறும் ஆற்ற லுடையான் வாக்கி யாகும் (52 - 3) பிங்கலம்