பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153 மாறு தமிழ்நூல்கள் கூறினாலும் மேற்கூறப்பட்ட பலவகை இயல்பும் ஒருங்கமையப் பெற்ற சிறந்த புலவர்களும் வாழ்ந் திருக்கின்றனர். தனி இயல்பு வாய்ந்த புலவர்களும் இருந் திருக்கின்றனர். இப்புலமையுடையவரை மேலோர், பண்டிதர், புலவர், ஆசிரியர், புந்தியர், மேதையர் என்னும் பெயரால் அழைப்பர். இவரின் மேலான அறிஞர் அல்லது அறிவரை ஆன்றோர், சான்றோர் என்று கூறுவர். புலமைக்கும் அறிவிற்கும் நுட்பமான வேறுபா டொன்றினைக் கற்றோர் கூறுகின்றனர். நிகழ்வில் புலப்படு மவற்றை மட்டும் உணர்தல் புலமையென்பதும், முக்காலச் செய்திகளை உணர்தல் அறிவுடைமை என்பதும் அவ்வேறு பாடாகும். இவ்வறிவுடையவரைப் புலவர், அறிவர் என்று வழங்குவர். தொல்காப்பியர் அறிவன் இலக்கணத்தை, மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியில் ஆற்றிய அறிவன் தேயமும் o என்று கூறியுள்ளார். இந்நூற்பாப் பகுதிக்குக் காமம் வெகுளி மயக்கமில்லாத ஒழுகலாற்றினை இறப்பும் நிகழ்வும் எதிர்வுமென்னும் மூவகைக் காலத்தினும் வழங்கும் நெறியான் அமைத்த முழுதுணர்வுடையோன் பக்கமும்" என்று உரை கூறி, அகத்தியர் முதலானவரை உதாரணமாகக் காட்டுவர், நச்சினார்க்கினியர்.இலக்கியங்களைப் படைக்கும் ஆசிரியன் கவி, கமகன், வாதி, வாக்கியாகவும் இருக்கலாம். ஆசு மதுர சித்திர வித்தாரப் புலவனாகவுமிருக்கலாம். இவர்களில் மேலான அறிவனாகவும் இருக்கலாம். நெஞ்சில் ஒளியில்லாத புலவர் பாடல் முற்காலத்தே யாப்பிலக்கணம் கற்பதும் அவ்விதிப்படி செய்யுள் இயற்றுவதும் அரிய செய்கையாகவே கருதப் 1. மேலோர் பண்டிதர் புலவர் ஆசிரியர் புந்தியர் மேதையர் புலமை யோரே (123 - 5 - பிங்கலம்) 2. ஆன்றோர் சான்றோர் அறிஞர்தம் பெயரே (124 - 5 - பிங்கலம்).