பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 பொருள் முடிவு பெறுமாறு சொல் தொடுக்குங்கால், இயற் சொல்லாகிய பெயர் வினை, இடை உரியானும், திணை வழு முதலான எழுவகை வழுவும் படாமல் அப்பொருளைப் புணர்ப்பது" என்று கூறி, "அவற்றுள் இயற்சொல் மரபாவது சொல்லதிகார இலக்கணத்தோடு பொருந்துதல், திரிசொல் மரபாவது தமிழ்நாட்டகத்து தத்தமக் குரித்தாக வழங்கும் மரபு. திசைச்சொல் மரபாவது செந்தமிழ் சூழ்ந்த பன்னிரு நிலத்தினும் வழங்கும் மரபு. வடசொல் மரபாவது திரிந்தவகையாகி சொல் மரபு" என்று கூறி, "யாதானும் ஒரு செய்யுள் செய்யுங்காலத்துப் பொருளுணர்த்தும் சொற்கள் இவையாதலின், இவை ஒரு பொருட்கண் வாராமையான் அவற்றை அவ்வம் மரபினாற் கூறுதலும், ஒருமை பன்மை மயங்காமையும், பெயரும் வினையும் முடிவு பெறக் கூறுதலும் வேண்டுதலின் மரபென்னும் இவ்வுறுப்பும் செய்யுட்கு வேண்டுவதாயிற்று" என்று கூறியுள்ளார். பேராசிரியர் மேற்கண்ட நூற்பாவிற்கு வேறுபடப் பொருள் கூறியுள்ளனர். அவர் கூறுவது வருமாறு:"அங்ங்னம் கூறப்பட்ட மரபுதானும், பெயர்ச்சொல், வினைச் சொல் இடைச்சொல், உரிச்சொல் அல்லது இயற்சொல் திரிசொல், திசைச்சொல் வடசொல்லென்னும் நான்கு சொற்களையும் உலகத்தார் வழங்கும் வழக்கு, வடிவினான், மேல் நூற்பாவில் பகுத்த பாட்டு, உரை, நூல், வாய்மொழி பிசி அங்கதம் முதுசொல் என்னும் யாப்புவழிப் பொருத்த முடைத்தாக அமைப்பது" என்னும் உரைகூறி, "வழக்கின்கண் வழங்குகின்றபடியே செய்யுளின்கண்ணும் அச்சொற்களை யாத்தல்வேண்டும்" என்றனர். அவர் மேலும், "எனவே சொல்லும் பொருளும் அவ்வக்காலத்தார் வழங்குமாற்றானே செய்யுள் செய்க" என்பதாயிற்று என்பர். நச்சினார்க்கினியர் பேராசிரியரையே பின்பற்றி "மரபென்ற உறுப்புத்தானும் நான்கு சொல்லையும் உலகத் தோர் எழுவகை வழுவும் படாமல் வழங்குகின்ற வழக்கு வழுவாதனவாய் அமைய, முற்கூறிய யாப்பின் வழியிலே பொருத்தமுடையனவாய்க் கிடப்பனவாம் என்று கூறி,