பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 சுற்றி வேற்றுமொழி வழங்கும் நாடு தொல்காப்பியர் காலத்தில் பன்னிரண்டாக இருந்திருக்க வேண்டும். அவற்றையே செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலம் என்று அவர் குறிப்பிட்டிருக்க வேண்டும். சொல்லதிகார உரையாசிரியருள் ஒருவராகிய தெய்வச் சிலையார் என்பவர் "செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலமாவன: வையை யாற்றின் தென் கிழக்காகிய பொதுங்கர் நாடு ஒளி நாடு தென்பாண்டி நாடு கருங்குட்ட நாடு குடநாடு பன்றி நாடு கற்கா நாடு சீத நாடு பூழி நாடு மலையமான் நாடு அருவா நாடு வடதலை நாடு என்பனவாகும் என்று இளம்பூரணர் உரைக்கருத்தைக் கருதி எழுதிவிட்டு, அவரே இப்பன்னிரண்டு நாடும் செந்தமிழ் நாட்டகத்த செந்தமிழ் சேர்ந்த நாடு என்றமையான் அவை புறத்தே உள்ள பிற நாடாக இருக்க வேண்டும் என்பார் கூறுமாறு "கன்னித் தென்கரைக் கடற்பழந்தீபம் கொல்லம் கூபகம் சிங்களம் என்னும், எல்லையின் புறத்தவும் கன்னடம் வடுகம், கலிங்கம தெலுங்கம் கொங்கணம் துருவம், குடுகம் குன்றம்" என்பன என்பர். இக்கருத்தை நன்னூற் பழைய உரையாசிரியராகிய மயிலை நாதர் அகத்திய நூற்பாக் கருத்தாகக் கூறுவர். அகநானூற்றுப் பாடற்பகுதி "தமிழ்கெழு மூவர் காக்கும் மொழி பெயர் தேஎத்த பன்மலை இறந்தே" (31) என்னும் அடிகளால் தமிழ் நாட்டின் ஓரத்தில் இருந்த மொழி பெயர் தேயத்தைக் (வேறுமொழி வழங்கும் தேயம்) குறிப்பிடுதலையும் கருதி உணர வேண்டும். வடவேங்கடம் தென்குமரி உள்ளிட்ட நிலப் பரப்பைத் தமிழ்நாடு, தமிழ் வரைப்பு, செந்தமிழ் நிலம் என்ற பெயர்களால் வழங்கலாம். தமிழை நன்கு கற்ற செந்தமிழ் நடைக்குரிய சான்றோர் தமிழ்நாட்டிலே பரவலாக எல்லாப் பகுதியிலும் வாழ்ந்திருந்தனர். இலக்கியம் இலக்கு என்ற சொல் நல்ல தமிழ்ச்சொல். அதற்குக் குறி, அல்லது குறிக்கோள் என்பன பொருளாகும். வில்லிலே