பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163 நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின் நீங்கின் அதனைப் பெற என்னும் திருக்குறளில் வந்துள்ள பிறிதுமொழிதல் என்னும் அணி பகைவர் தந்நிலத்தினில் வலியர் என்பதை உணர்த்துகிறது. இவ்வாறு அணிகளெல்லாம் பாட்டிற்கு உயிரான பொருளையே அழகுபட உணர்த்தலின், வீர சோழியம் "ஒப்பார் பொருளே உயிரானமையின் உரைத்த வற்றைத் துப்பார் அலங்காரமாகத் தொகுக்க" என்று சொன்னது ஏற்புடைத்தாதல் அறியலாம். இதனால், பொருள் உயிரன்றி அதனை உண்ர்த்து கின்ற முறையினையும் உயிரென்றல் பொருந்துமாறறிக