பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 நச்சினார்க்கினியர் - உருவும் வடிவும் கட்புலனாகா உருவும் கட்புலனாகிய வடிவும் என்று உருவிற்கும் வடிவிற்கும் வேற்றுமை கூறினும் தொல்காப்பியர் உருவென்னும் சொல்லைக் கட்புலனாகும் பொருள் வடிவத்தைக் குறித்துக் கூறிய இடங்களும் உண்டு. அவர் நூன்மரபில் உயிர்மெய்யிலக்கணத்தைக் கூறும்பொழுது "ஏனை உயிரொடு உருவுதிரிந் துயிர்த்தலும்" என்று கூறு வதால் உணரலாம். 'உருவுதிரிந் துயிர்த்தல்' என்பதற்கு இளம்பூரணர் கட்புலனாகும் வரி வடிவத்தையே கருதி, "மேலும் கீழும் விலங்கு பெறுவன விலங்கு பெற்றுயிர்த்தலும், கோடு பெறுவன கோடு பெற்றுயிர்த்தலும், புள்ளி பெற்றுயிர்த் தலும், புள்ளியும் கோடும் உடன்பெறுவன உடன் பெற்றுயிர்த்தலுமெனக் கொள்க" என்பர். நச்சினார்க்கினியர் "கி, கீ முதலியன மேல்விலங்கு பெற்றன. கு, கூ முதலியன கீழ் விலங்கு பெற்றன: கெ, கே முதலியன கோடு பெற்றன. கா., ஞா முதலியன புள்ளி பெற்றன: அருகே பெற்ற புள்ளியை இக்காலத்தார் காலாக எழுதினர்; கொ, கோ, ங்ொ, ங்ோ முதலியன புள்ளியும் கோடும் உடன் பெற்றன" என்பர். (தொல் எழு. 17). எழுத்துக்களின் வரிவடிவத்தை வேறுபடுத்திக் காட்ட மேல் விலங்கும் கீழ் விலங்கும் கோடும் புள்ளியும் பயன் படுத்தப்பட்டன. 'விலங்கு' என்பது குறுக்கு வளைவு என்று பொருள்படும். 'புள்ளி' என்பது வட்டவடிவமான பொட்டு. கோடு என்பது கொம்பு என்று பொருள்படும். அகநானூறு 343ஆம் பாட்டில் கோடு என்பதைப் பற்றிச் செய்தியொன்று கூறப்படுகிறது. உமணர் செல்லும் வண்டியின் தலைப்பு மோதி மோதிச் சிதைத்து விட்ட வலிய இடத்தில் நடப்பட்டுள்ள நடுகல்லில் கூரிய உளியால் குயிலப்பட்ட (செதுக்கப்பட்ட எழுத்துக்களில் கோடு தேய்ந்து விட்ட காரணத்தால் அவ்வழிச் செல்லும் புதியவர்கள் அந்நடுகல் எழுத்தைப் படிக்கத் தொடங்க,