பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 வகரமும் ஒத்திசைக்குமென்றும், இம்பர், உம்பர் என்றாற் போல்வன காலவரை இடவகைகளான் மயங்குமாகலின் இவற்றின் முதற்கண் நிற்பது யாதோ இறுதிக் கண் நிற்பது யாதோ என்னும் ஐயம் நீங்குதற்கு "இகர யகரம் இறுதி விரவும்" என்றும் கூறினார். மொழிந்த பொருளோடொன்ற அவ்வயின் மொழியாததனையும் முட்டின்று முடித்தல் என்னும் உத்தியால் எகர ஏகாரங்கள் ஒகர ஒகாரங்கள் அவ்வாறாதலும் கொள்ள வைத்தார். மாபாடியத்துள் ஊகாரத்தின் பின் நின்ற வடவெழுத்து நான்கு உயிர்க்கும் இடையே ரகர லகரக் கூறுகள் ஒத்துநிற்கும் என்ற ஆசிரியர் பதஞ்சலியார்க்கு ஐ, ஒள என்புழியும் இடையே யகர வகரக் கூறுகள் விரவி நிற்கும் என்பது உடன்பாடாதல் பெற்றர்ம்" என்பர். இலக்கணக் கொத்துரை அகரம் இகரம் ஐகார மாகும்' என்பனவற்றிற்கு இளம்பூரணர் உரையையும் சிவஞான முனிவர் கருத்தினையும் மேலே கண்டோம். இது பற்றிச் சுவாமிநாத தேசிகர் தம் இலக்கணக் கொத்துரையில் கூறும் செய்தியையும் பார்ப் போம். அவர் தம் நூலுள் ஒழிபியலில், போலி எழுத்தைப் போற்றுதல் கடனே (91 - 5) என்று நூற்பா எழுதி, அதன் உரையுள் "ஈறெழுத்துக் கள் கூடி ஒரெழுத்துபோல வருவனவற்றைத் தள்ளாது கொள்க என்றவாறு, தள்ளில், ஐயென் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும் ஐயந் தீரப் பொருளை உணர்த்தலும் மெய்நடு நிலையும் மிகுநிறை கோற்கே கையி னாற்சொலக் கண்ணினிற் கேட்டிடும் மொய்கொள் சிந்தையின் மூங்கையு மாயினேம் கையறு நெஞ்சம் கடியல் வேண்டும் பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி