பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 ரெழுத்து மொழிகளும் தோன்றின. இவற்றின் பின்னர் தான் மக்கள் எழுத்தைப் பற்றி எண்ணத் தொடங்கினர். எழுத்தின் ஒலிவடிவத்தைக் கருதி வரிவடிவம் அமைத்துச் சொற்களை எழுதத் தொடங்கினர். வாய்ப் பழக்கமாகச் சொற்கள் வளர்ந்த பிறகே மக்கள் எழுத்தினை அமைக்கத் தொடங் கினர் என்பதற்குத் தமிழிலுள்ள குற்றியலிகரம், குற்றியலு கரம், ஆய்தம் என்றும் சார்பெழுத்துக்களே சான்றாகின்றன. இவ்வெழுத்துக்களை இன்றும் மொழியில் வைத்துத்தான் உணர்கின்றோம். எழுத்துக்களைக் கண்டு பிடித்து எழுதத் தொடங்கிய வுடன் அவ்வெழுத்தில் வாய்மொழிப் பாடல்களை எல்லாம் எழுதினர். சில செய்யுள்களை எழுத்தில் எழுதக்கூடாது; எழுதினால் அதன் ஆற்றல் குன்றிவிடும் என்று பண்டை யோர் கருதியதால் எழுதாமல் விட்டனர். அவ்வாறு எழுதாமல் விட்டது மந்திரச் செய்யுளாகும். அதற்கு வாய்மொழி என்றும் பெயர். "பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே அங்கதம் முதுசொல் அவ்வேழ் நிலத்தும்" (செய்யுளில் 75) என்னும் தொல்காப்பிய நூற்பா மந்திரத்தை வாய்மொழி என்றே குறிக்கின்றது. எழுத்தைக் கண்டுபிடித்து எழுதத் தொடங்கிய பின் எழுதும் இலக்கியமும் தோன்றின. தொல்காப்பியருக்கு முன்னும் தொல்காப்பியர் காலத்திலும் தோன்றிய இலக்கியங்கள் எல்லாம் தனிப்பாடல் இலக்கியங் களே ஆகும். தொல்காப்பியர் காலத்துத் தனிப் பாடல்கள் எல்லாம் சிறிய வடிவத்திலும் உள்ளன. பெரிய வடிவத்திலும் உள்ளன. எடுத்துக்காட்டாக, 'நன்றே காதலர் சென்ற வாறே பைம்புதற் பல்ப மலர இன்புறத் தகுந பண்புமா ருடைத்தே" என்னும் இவ்வாசிரியப்பா மூன்று அடியால் வந்த சிறிய பாட்டாகும். மதுரைக் காஞ்சி என்னும் தனிப்பாட்டு 782 2