பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

183 மெய்யும், உயிரளபெடையும் தத்தம் வகையாற் கூடுமாறும் ஐகாரம் ஒளகாரம் போலி வகையாற் கூடுமாறும் யாழ்நூலகத்து ஒற்றிசை நீடுமாறும் ஆண்டுத் தோற்றுவாய் செய்தான். செய்யவே அவை ஈண்டுக் கூறும் எழுத்தியல் வகையோடு ஒக்குமென்று உய்த்துணர்ந்து கொள்ளுமாறு வைத்தான் என்பது, இவற்றோடு மகரக் குறுக்கமும் கூட்டிப் பதினாறெழுத்து என்பாரும் உளர். அதனாற் பயன் என்னை எனின்? (மகரக்குறுக்கத்தால் பாட்டுடைத் தலைவன் கேட்டிற்குக் காரணமாம் என்பார். மற்று உயிர்மெய்த் தொடக்கத்து ஐந்தினையும் மேல் (எழுத்ததிகாரத்தில்) எழுத்து என்றினாகலான் ஈண்டு (செய்யு ளியலில்) எழுத்தியல் வகையுள் எழுத்தாக்கி அடக்குமாறு என்னை எனின்? ஈண்டு மேற்கிளந்தன்ன எனவே, ஆண்டு உயிர் மெய்யை இரண்டெழுத்தின் கூட்டமெனவும், அளபெடையைக் குன்றிசை மொழி (தொல், எழுத்து 41) எனவும், ஐகாரம், ஒளகாரங்களை போலி எனவும் (தொல், எழுத் 54555658) கூறினானாயினும், அவற்றை எழுத்தியல் வகையெனப் பெயர் கொடுப்பவே, ஆண்டு நின்ற வகையானே ஈண்டு எழுத்தெனப்படும் என்பதாயிற்று. இதன் கருத்து, இயல் (தொல், செய் - 2) என்ற தனான் இயற்றிக் கொள்ளும் வகையால் எழுத்து இனைய தென்றானாம். எழுத்தியல் வகை (தொல் எழுத்து. 2) என்பதனான் முப்பத்து மூன்றெழுத்தினைக் குறிலும் நெடிலும் என்றற் றொடக்கத்துப் பெயர் வேறுபாட்டால் பத்து வகைப்பட இயற்றுதலும் கூட்ட வகையான் இரண்டும், போலி வகையான் இரண்டும், யாழ் நூல் வேண்டும் வகையால் ஒன்றும் (ஒற்றளபெடை, தொல், எழும்.33) ஐந்துவகையான் இயற்றுதலும் என இருவகையும் கொள்ளப்படும் என்பர். (செய்யுளியல் -2) யாப்பருங்கலம், உயிரே மெய்யே உயிர்மெய் என்றா குறிலே நெடிலே அளபெடை என்றா வன்மை மென்மை இடைமை என்றா