பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 அளபெடை அந்நெட்டெழுத்தோடு குற்றெழுத்து ஒத்துநின்று நீண்டிசைப்பதொன்றாயினும் மொழிக் காரணமாய் வேறு பொருள் தராது இசை நிறைத்தன் மாத்திரைப் பயத்ததாய் நிற்றலின், வேறு எழுத்தென வைத்து எண்ணப்படாதாயிற்று என்பது நுண்ணுணர்வால் ஒர்ந்துணர்க. குன்றிசை மொழிவயின் நின்றிசை நிறைக்கும் நெட்டெழுத் திம்பர் ஒத்த குற் றெழுத்தே என்றது.உம் இக்கருத்தே பற்றி என்க. இப்பெற்றி அறியாதார் நெடிலும் குறிலும் விரலும் விரலும் சேரநின்றாற் போல இணைந்து நின்று அளபெடுக்குமெனவும், அளபெடை எழுத்து உயிரெழுத்துள் அடங்காதெனவும், சார்பெழுத்தென வைத்து வேறு எண்ணப்படுமெனவும் தமக்கு வேண்டியவாறே கூறுப. மறுப்பு நெடிலும் குறிலும் அவ்வாறு நின்று அளபெழும் என்றல் பொருந்தாமைக்கு எழுத்தென என்னாது அளபெடை என்னும் குறியீடே சான்றாத லறிக. அன்றேல் ஒரெழுத்தினையே இரண்டு மாத்திரையும் ஒரு மாத்திரையுமாகப் பிரித்தசைத்துச் சீர் செய்தல் பொருந்தாது எனின், அற்றன்று எழுத்து வகையான் என்னாது "மாத்திரை வகையாற் றளைதம கெடாநிலை, யாப்பழி யாமை என்று அளபெடை வேண்டும்" என்றமை யின் எழுத்திற்கு மாத்திரை கோடலும் அசைத்தலும் சீர் செய்தலும் தளையறுத்தலும் ஒசை பற்றியல்லது எழுத்துப் பற்றியல்லவென மறுக்க, இன்னும் வடநூலார் அ என்னும் ஓரெழுத்தே ஒரு மாத்திரையாய் உச்சரிக்குங்கால் குற்றெழுத்தென்றும் இரண்டு மாத்திரையாய்க் கூட்டி உச்சரிக்குங்கால் நெட்டெழுத் தென்றும், மூன்று மாத்திரையா யுச்சரிக்குங்கால் அளபெடை எழுத்தென்றும், மூவகைப்படும் எனவும், அம்மூன்றும் எடுத்தல், படுத்தல், நலிதல் என்னும் ஒசைவேறுபாட்டால்