பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

199 வணிகன் தன்மகள் குணமாலையைச் சீவகனுக்கு மணம்பேசி வருமாறு அனுப்பினான் என்று கூறுகின்றார். கற்றார், மற்றும் கட்டுரை வல்லார்; கவியென்னும் நற்றோர் மேலார் நால்வரை விட்டாற் கவர்சென்றார் (சிந்தாமணி - 1054) இப்பாட்டில் நச்சினார்க்கினியர் கருத்துப்படி நூல்களைக் கற்பது ஒருகலை; மற்றும் என்றதனால் கற்றதற்கு கட்டுரையில் வல்லராதல் ஒருகலை: கவிபாடுதலில் வல்லராதலும் ஒருகலை. இப்பாட்டின் உரையில் நச்சி னார்க்கினியர் இம்மூன்று கலையும் வல்லவர் நால்வர் என்று குறிப்பிட்டுவிட்டு, இவர் நால்வரை நற்றோர் மேலாராய் அனுப்பினான் என்கின்றார். ஆனால் பாடல் செல்லும் நெறியைக் கருதினால் கற்றோரும், கட்டுரை வல்லாரும், கவி என்னும் நற்றோர் மேலாரும் ஆகியவருள் நால்வரை மணம்பேச அனுப்பினான் என்று கொள்ளலாம். எங்கனமாயின் கற்றல் ஒருகலை, கட்டுரைத்தல் ஒருகலை, கவிபாடுதல் ஒருகலை, அக்கலைகளுள் கவிபாடுதல் என்பது மிகச் சிறந்த கலையாகக் கருதப்படுகிறது. நான்கு புலமை புலமை என்னும் சொற்கு அறிவுடைமை என்று பொருள். சங்க இலக்கிய காலத்திற்குப் பின் அறிஞர் புலமையை நான்காகப் பகுத்து வழங்கியுள்ளனர். கவியே கமகன் வாதி வாக்கியென இவையொரு நான்கே புலமைக் கியல்பே கவிப்புலமை கமகப்புலமை வாதிப்புலமை வாக்கிப் புலமை எனப் புலமை நான்கு வகைப்படும் என்று திவாகரம் கூறுகிறது. இந்நான்குள் கவிப்புலமையைப் பின்னர் கூறுவோம். அடுத்த கமகப் புலமையாவது: அரிய நடையாகிய ஞாபக நடையானும், தெளிந்த நடையாகிய செம்பொருள் நடை யானுந் தான் நன்கு கற்ற நூலாலும் நன்கு கல்லாத நூலாலும் உணர்த்தவேண்டிய பொருளை உணர்த்தலாம்.