பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 பாடுகின்ற பாடலுக்குப் பெயராக வரும்பொழுது கருத்து அறிவு என்னும் இரண்டு பொருளில் வரும். கருத்தை அறிவிப்பது கவி. அறிபொருளை அறிவிப்பது கவி. எனவே, தூக்கு, யாப்பு, செய்யுள், கவி, பாட்டு, கவிதை என்பன கருத்தினை உட்பொருளாக வைத்துத், தாளத்துடன் கூடிய பரந்துபட்ட ஒசை அமையுமாறு எழுத்து அசை சீர் தொடை என்னும் இவை அமைந்த சொல்லால் ஆக்கப்பட்ட அடிகள் அமைய, உவமை முதலான அணிநலமும் மெய்ப்பாடும் விளங்கப் புலவன் பாடும் பாட்டாகும். கல்லாத மக்கள் தம் கருத்தைத் தாம் உரைக்கும் உரைநடையாற் கூறுவர். இதனை உலக வழக்கென்பர். கற்ற புலவன் தன் கருத்தைச் செய்யுள் நடையாற் கூறுவன். இதனைச் செய்யுள் வழக்கென்றும் புலனெறி வழக்கென்றும் கூறுவர். இவ்விரண்டில் புலனெறி வழக்கோ ஏட்டில் எழுதப்பெற்றுச் சிறந்ததாகக் கருதப் படுகின்றது. மறைமலை அடிகளார் கருத்து "அறிவுநிலை உணர்வுநிலை என்னும் இரண்டு லைகளைத் தந்து மிகுந்த பயனைத் தருவது பாட்டாம். @ ரு உரை, பாட்டு என்ற இரண்டில் உரையும் அறிவுநிலை உணர்வுநிலையைத் தரும். பாட்டிற்கு மட்டும் ஏற்றம் என்ன வெனின்? பால் கறந்த மாத்திரையே உண்பார்க்கு அது சுவைபயக்கும் |ஆயினும், பாலினை வற்றக் காய்ச்சி சருக் கரை முதலியன உடன்சேர்த்து உண்ணின் சிறந்த சுவையைப் பயக்கும். அதுபோல உரையினை வழு வில்லாமற் செய்து அச்சொல்லால் தொடை நலம்பட அணி தோன்ற நல்ல ஒசைபடப் பொருளினை அமைத்துச் செய்யுள் செய்யின் அப்பாட்டு மிக்க சுவையை விளைவிக்கும்" என்று பட்டினப்பாலை ஆராய்ச்சி உரையில் தவத்திரு மறைமலை அடிகளார் கூறியுள்ளார். திரு. எஸ். வையாபுரிப்பிள்ளை இக்கவிதைத் துறை என்பது கருத்தும் கலையும் ஒருங்கு விளங்கும் இடம் ஆகும். கவிதையோ மக்களது துன்பம்