பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

219 பிற அணிப்பொருளையும் அச்சொல்லுடன் கலந்து கற்பனை அழகு தோன்றப் புலவன் உணர்த்துகிறான். புலவன் தான் கருதிய பொருளை வினைபற்றி, பயன் பற்றி, பண்பு பற்றி உணர்த்தக் கருதிய பொழுது, அதற்கேற்ற உவமைப்பொருளை வைத்து அணிபெற உணர்த்துகின்றான். அவ்வாறு உணர்த்தும்பொழுது தாமரை போலுள்ளது, முகம் புலி போலும் சாத்தன், பவழம் போன்றது வாய், துடி போன்றது இடை என்று ஒப்புமை ஒன்றையே கருதி போல என்னும் சொல்லால் முற்றிலும் உவமை கூறிக் கொண்டு போனால், அது கற்பவர்கட்குச் சுவையைக் குறைத்து விடும். தாமரை மதிக்கும் முகம் தாமரையை வெல்லும் முகம், தாமரையை ஒட்டும் முகம், தாமரையைக் கடுக்கும் முகம், தாமரை மருளும் முகம், தாமரையைக் காய்க்கும் முகம், தாமரையை உறழும் முகம் என்று உவமையைப் பல சுவைப்படி மாற்றிக் கூறுதல் வேண்டும் என்பது தொல்காப்பியர் கருத்து. தாமரையை எள்ளும் முகம் என்றால் பொருளாகிய முகம் உயர்ந்ததாகிய தாமரையை எள்ளக்கூடிய வகையில் சிறந்திருக்கின்றது. தாமரை விழையும் முகம் என்றால் உயர்ந்ததாகிய உவமையும் விரும்பும் வகையில் பொருள் ஆகிய முகம் சிறந்திருக்கின்றது. இவ்வாறு உவமைக்கும் பொருளுக்கும் பலதிறச் செயல்களைக் சொல்லி கற்போர் காமுறுமாறு உவமையாகக் கூறவேண்டும். உவமை மெய்ப்பாடு மெய்ப்பாட்டியலை அடுத்துப் பின்நிற்பது உவம இயல் உவம இயலை அடுத்து முன் நிற்பது மெய்ப் பாட்டியலாகும். அதனால், உவமை கூறும்பொழுது எட்டு மெய்ப்பாடும் தோன்றுமாறு கூறுதல் வேண்டும். இதனைத் தொல்காப்பியர், பெருமையும் சிறுமையும் மெய்ப்பா டெட்டன் வழிமருங் கறியத் தோன்றும் என்ப (19) என்பர். 15