பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 எண்வகை யாக இயம்பினர் நன்றே! மடக்கே முதலாம் மாண்புறு சொல்லால் சொல்லப் படுவது சொற்சுவை நடையாம்; பிறமொழி கலவாப் பீடுசால் நன்னடை தனித்தமிழ் நடையாம் தக்க ஈ தொன்றே மொழியின் இயல்பை முற்றுறக் காக்கும் வடவர் மொழியும் பிறர்பிறர் மொழியும் வந்து கலப்பின் தமிழ்நெறிக் கியைய திரித்து வழங்கினும் தெரிதமிழ் நடையாம் திரிந்து விலாதது கலவை நடையே மொழிப்பற் றில்லார் முன்னுவ திந்நடை: மோனை முதலிய தொடைநிலை பொருந்தச் செய்யுளை, வழக்கைச் செப்பிடின் அவையே "மலர்த்தொடை போன்ற" மாண்புற தொடைநடை: தொடைக ளிலாமல் தொடுப்பின் அவற்றைச் செந்தொடை என்று செப்புவர் அறிஞர் அகப்பொருள் நடை பல; அவற்றை விரிப்பின் ஒருபால் உளதாம் காமத்தை உரைக்கும் கைக்கிளை எனும்நடை கவர்ச்சி நடையே ஒத்த தலைவனும் தலைவியும் விரும்பும் அன்பியல் நடையாம் ஐந்தினை நடையே அதுவே குறிஞ்சி நடையெனப் பாலை நடையென முல்லை நடையென நெய்தல் நடையென மருத நடையென மலர்ந்து மணக்கும்; பொருந்தாக் காம வகைநடை பலவாம் பெருந்திணை நடையெனப் பேசினர் அதனை காமம் மிகுந்தவன் கையா றெய்தி மடன்மா ஊர்தலும் மலையேறி வீழ்தலும் முதலிய செய்து மூதுயிர் துறப்பன் காமம் மிகுந்தவன் கையா றெய்தி வெறிபிடித் தலைவன் வியலகத் தாங்கள் இருவரும் இயங்கும் இடையாச் சுரத்தே காதலி இறப்பக் காதலன் புலம்புவன்