பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 உலக முவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாங்கு ஒவற இமைக்கும் சேண்விளங் கவிரொளி உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்தாள் செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை மறுவில் கற்பின் வாணுதல் கணவன் (திருமுருகாற்றுப்படை 1-6) என்றவழி 'ஒளி' என்பது அதனயற் கிடந்த தாளை நோக்காது கணவனை நோக்குதலின் இடையிட்டு நோக்கிற்று பிறவுமன்ன" என்பர். இளம்பூரணர் மேலே "யாதானும் ஒன்றைத் தொடுக்குங் காலத்துக் கருதிய பொருளை முடிக்குங்காறும் நிலை நோக்கு " என்றார். நோக்கி நிற்பது எது? என்ற வினா எழு கின்றது. பேராசிரியர் "நோக்கென்பது மாத்திரை முதலாகிய உறுப்புக்களைக் கேட்டார்க்கு நோக்குப்படச் செய்தல்" என்று விளக்கம் கூறிவிட்டு, " நாற்சொல் வழக்கினையும் பாவிற்படுப்பது மரபென்றான், எனவே, ஆண்டு நோக்கி உணரப்படுவதன்றிச் செய்யுளுள்ளும் உலகவழக்கின் இயல்பினவாகி வெள்ளைமையாய்க் காட்டுவனவாயின. அவ்வாறன்றி நோக்கென்பதோர் உறுப்புப் பெற்றவழியே அது செய்யுளாவதாகலான் அது கூறுகின்றான் என்று நூற்பாவிற்குக் கருத்து எழுதிவிட்டு " மாத்திரையும் எழுத்தும் அடைநிலையும் சீரும் முதலாக அடி நிரம்புந் துணையும் நோக்குடையவாகச் செய்தல் வன்மையாற் பெறப்படுவது நோக்கென்னும் உறுப்பாவது" என்று பொழிப்புரை கூறி, கேட்டார் மறித்து நோக்கிப் பயன் கொள்ளும் கருவியை நோக்குதற் காரணமென்றான் என்பது. அடிநிலை காறும் என்பது ஒரடிக் கண்ணே யன்றியும் செய்யுள் வந்த அடி எத்துணையாயினும் அவை முடிகாறும் என்றவாறு என்று விளக்கம் எழுதினர். இளம்பூரணர் நோக்குதல் காரணம் என்றதை நோக்குதலாகிய காரணம்' என்றனர். பேராசிரியர் நோக்கு உடையவாகச் செய்யும் கருவி என்றனர். நச்சினார்க்கினியர்