பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 மறித்து நோக்கிப் பயன் கொள்வதோர் கருவியாகிய யாப்புக்கால். என்னை? மாத்திரை முதலா அடிநிலை காறும் நோக்குதற் காரணம் ந்ோக்கெனப் படுமே என்றாராகலின் அதற்குச் செய்யுள் 'முல்லை வைந்துனை தோன்ற என்றனர். எனவே பேராசிரியர் உரைக் கருத்தினை வைத்துக் கொண்டே பரிகாரம் என்னும் பெயருடைய அணியைப் படைத்துவிட்டது. எனவே, பேராசிரியர் உரையைக் கருதி எழுந்த வினாவே இவ்வணிக்கும் எழுகின்றது. பின்னை நோக்கென்பது எது என்று வினாவின், மாத்திரை முதலாக அடி நிலைகாறும் உள்ள ஐந்து உறுப்பும் தனித்தனி மனத்தால் நோக்கப்பட்டு வழுவின்றித் தமக்குரிய இலக்கணத்தைப் பெற்று ஒசையைத் தருகின்றனவா? பொருளினைத் தருகின்றனவா என்பதை உணர்ந்து கொள்ளுதலாம். செய்யுளுக்குத் தெரிந்து மொழிச் செய்தி என்று ஒரு பெயர் உண்டு. ஒவ்வொன்றையும் தெரிந்து தெரிந்து மொழிய வேண்டும் என்ற பொருளை அச்சொல் உணர்த்துகின்றது. இம்மென்னும் முன்னே எழுநூறும் எண்ணுாறுமான பாட்டுக்களைப் பாடிக் கொட்டிவிடுவது செய்யுளன்று, மாத்திரையை எழுத்தை அசையை சீரை அடியை தெரிந்து மனத்தால் நோக்கி அமைப்பதே நோக்காதல் வேண்டும். செய்யுளுக்குரிய ஏனைய உறுப்புக்கட் கெல்லாம் இந்நோக்கினை உறுப்பாகக் கூறாமல் மாத்திரையிலிருந்து அடிநிலைவரை உள்ளஐந்து உறுப்பிற்கு மட்டும் நோக்கு வேண்டும் என்று கூறுவதால் செய்யுள் இவ்வைந்தும் சிறந்தனவாம் என்க.