பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

237 இளம்பூரணர் வெண்பாவாவது, பிறதளையோடு மயங்காமையானும் மிக்கும் குறைந்தும் வராத அடியான் வருதலானும் என்றும் (தொல், செய். 101 வெண்பா யாப் பாவது, வெண்சீரானும் இயற்சீரானும் வெண்டளையானும் செப்பலோசையானும் அளவடியானும் மூச்சீர் ஈற்றடியானும் வருவது (தொல், செய். 114) என்றும் கூறுவர். காரிகை உரையாசிரியர் செப்பல் ஒசைத்தாய், ஈற்றடி முச்சீராய், ஏனையடி நாற்சீராய், வெண்சீரும் வந்து வெண்டளைதட்டு, வேற்றுத்தளை விரவாது காசு, பிறப்பு, நாள், மலர் என்னும் வாய்பாட்டால் இற்று முடிவது வெண்பா என்பர். யாப்பருங்கலம் செப்பலோசை வெள்ளையுள் பிறதளை விரவா என்று கூறும். இயற்சீர் விகற்பத்தாலும் வெண்சீர் ஒன்றலாலும் (இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை) உண்டாகும். செப்பலோசை வகை ஒரு சாரார் வெண்சீரே வந்து வெண்டளை பெற்று வருதலை ஏந்திசைச் செப்பலென்றும் இயற்சிரே வந்து இயற்சீர் வெண்டளை பெற்று வருதலை ஒழுகிசைச் செப்பல் என்றும், வெண்சீரும் இயற்சீரும் வந்து வெண்சீர் வெண் டளையும் இயற்சீர் வெண்டளையும் பெற்று வருவதைத் துங்கிசைச் செப்பல் என்றும் கூறுவர். மற்றொரு சாரார் 1. வெண்சீர் வெண்டளையால் வரும் யாப்பு ஏந்திசைச் செப்பல் 2.இயற்சீர் வெண்டளையால் வரும் யாப்பு துரங்கிசைச் செப்பல் என்றும், 3. வெண்சீர் ஒன்றி இயற்சீர் விகற்பித்து வருவது ஒழுகிசைச் செப்பல் என்றும் கூறுவர். வஞ்சிப்பா துரங்கலோசை வஞ்சிப்பா துரங்கலோசையான் வரும் என்பர். இளம் பூரணர் தூங்கலோசை என்பது சீர்தோறும் அறுதியாய் ஒசைத்தாகி வரும் என்பர் (செய்யுளியல் 80). பேராசிரியர் அடியிற் றுங்காது சீர் தொறும் தாங்கலோசையை வஞ்சிப்பா பெறும் என்பர்.