பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

241 பஃறொடை வெண்பாவில் நீண்ட செப்பலோசையைக் ாண லாகும். பரிபாடலிலே வரையறையற்ற கலப் பொசையைக் காணக் கூடும். கலிப்பா துள்ளலோசையைப் பெற்று வந்தாலும் தரவு மிகவும் எடுப்பான துள்ளலோசையைப் பெற்றும் நாழிசைகள் தரவோசையிற் றாழ்ந்தும், அம்போதரங்க றுப்பும் வண்ண வுறுப்பும் முற்றிலும் வேறுபட்ட ன்ை களைப் பெற்றும், சுரிதகம் அகவல் ஒசையினையோ அல்லது வெண்பா ஒசையினையோ பெற்றும் கலிவெண்பா ஒரு பொருள் நுதலி நீண்ட செப்பலோசையைப் பெற்றும், உறழ்கலி இடையிட்ட செப்பலோசையைப் பெற்றும் கொச்சகம் பிறழ்ந்த ஒசையைப் பெற்றும் வரும். செந்துறை வெண்டுறை இயற்றமிழ் ஓசையை இதுவரை ஆராய்ந்தோம். இனி இசை த்தமிழ் ஒசையையும் நாடகத் தமிழ் ஓசையையும் பார்ப்போம்.யாப்பருங்கலம் செந்துறை மார்க்கமும் வெண்டுறை மார்க்கமும் என்ற இரண்டு மார்க்கத்தைக் கூறியுள்ளது. அந்நூலின் விருத்தியுரையாசிரியர், "நாற்பெரும் பண்ணும் இருபத்தொருதிறனும் ஆகிய இசையெல்லாம் செந்துறையாகும். ஒன்பது மேற்புறமும் பதினொராடலும் என்ற இவையெல்லாம் வெண்டுறையாகும் என்பது வார்ப்பியம் என்றனர், புறப்பொருள் வெண் பாமாலை ஒழிபில் பாடல் வென்றி துறை என்னும் துறையில், வண்டுறையும் கூந்தல் வடிக்கண்ணாள் பாடினாள் வெண்டுறையும் செந்துறையும் வேற்றுமையாக் - கண்டறியா கின்னரம் போலச் சினையமைந்த தீந்தொடையாழ் அந்நாட்டில் அச்சுவையும் ஆய்ந்து என்று வெண்பா, ஒருத்தி வெண்டுறைப் பாட்டும் செந்துறைப் பாட்டும் கூறுகின்றது. இங்கே பாடுதல் மிடற்றுப்பாடல், அப்பாடலை யாழ் நரம்பிசைக்குத் தக்கவாறு பாடினாள். எவ்வாறு பாடினாள் எனின்?