பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 (2) விதிகளிற் சில சில வெளிப்படா தாயின் உபலக் கணத்தினை ஒர்ந்தே உணர்க உபலக்கணம் என்பது ஒன்றன் இலக்கணம் பக்க உதவி யால் துணியப்படுவது. ஒருமொழி ஒழிதன் இனங்கொளற் குரித்தே' என்னும் விதியும் உபலக்கணமாம். இவ்விதியினால் பொருள் உணரவேண்டிய இடங்களும் உண்டு ஆதலின் இது பயில்பவர்க்கு வேண்டும் என்பது. எவ்வாறெனின்? "கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை" என்ற குறள் தலை ஒன்றனைக் கூறினாலும் காணாத கண், பேசாத நா முதலியவையும் கொள்ளுதல் உபலக்கண விதியாம் என்க. (3) தாம்முன் அறிந்ததற்கு ஈதுமா றாயின் என்னுல் விதியோ எனவே எண்ணுக கச்சியப்பர் தாம் பாடிய கந்தபுராண முதற்பாட்டில் திகழ் தசக்கர' என்னும் ழ கர வீற்றுப் புணர்ச்சியைத் திகடசக்கர'. என்று புணர்த்துக் கூறினார். இதற்குக் கற்றவரெல்லாம் மிகவும் பயிலும் தொல்காப்பியம், நன்னூல் முதலிய இலக்கண நூல்களில் விதியில்லை. திகடசக்கர' என்னும் தொடர்க்கும் தொல்காப்பியம் முதலானவற்றில் விதியில்லை யாயினும் அது வேறொரு நூலின் விதிப்படி புணர்ந்ததாம். அந்நூல் வீர சோழியம் என உணர்ந்து கொள்வது. (4) சிலநாள் பழகில் சிலவும் பலியா பலநாள் பழகில் பலிக்கும் என்க கூர்த்த மதியுடையராயினும் ஒரு நூலில் சிலநாள் மட்டும் அவர் பயிலின், சில செய்திகள் கூடத் தெளிவாய் அறிந்து கொள்ள முடியாதவராவர். மந்தராயினும் ஓர் நூலில் பல நாள் பயிலின் அவர் அந்நூலில் சிறந்த பயிற்சி உடையவராய் அந்நூலிற் கூறியுள்ள எல்லாப் பொருளையும் தெளிவுற அறியும் திறத்தினராவார் என்க. (5) விரைவால் பார்க்கில் தெரியா தொன்றும் விரையா தேற்கிற் கருகா தென்க கூர்த்த மதியுடையவராயினும் ஒரு நூலினை விரைந்து கற்கில் ஒரு செய்தியையும் ஐயம் திரிபற உணர்ந்து கொள்ள மாட்டாதவராவார். மந்தராயினும் மன அமைதி உடையவ