பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலியென நாலியற் றென்ப பாவகை விரியே என்னும் நூற்பாவால் கூறிவிட்டு, இந்நூற்பாவினை அடுத்து, அந்நிலை மருங்கின் அறமுத லாகிய மும்முதற் பொருட்கும் உரிய வென்ப என்று கூறுகின்றார். இந்நூற்பாவிற்கு இளம்பூரணர் மேற் கூறப்பட்ட பாக்கள் பொருட்கு உரியவாமாறு உணர்த்துதல் நுதலிற்று என்று கருத்தெழுதுவர். பேராசிரியர் இது, பாவினைப் பொருட்குரியவாற்றான் வரையறை கூறுவான் தொடங்கிப் பொருட்குரிமை பொது வகையான் உணர்த்து கின்றது; இது பொருளதிகாரமாகலின் இங்ங்னம் கூறு கின்றான் என்று கூறுவர். தொல்காப்பியர் வீட்டினை நீக்கி அறம் முதலான மும்முதற் பொருள்களைப் பாவிற்கு உரிமையாக்குகிறார். இந்த இடம் பாவென்னும் உறுப்பினைச் சொல்லுகின்ற இடம். அப்பாக்கள் இம் மும்முதற் பொருளுக்கும் உரிமை யாகி வருதலும் பாவின் இலக்கணமாகவே கருதுகிறார் தொல்காப்பியர். தொல்காப்பியர் மரபியலில் நூலின் இலக்கணத்தைக் கூறும்பொழுது நூற் பொருளை நூலின் பயனாகக் கூற வில்லை. நன்னூலாசிரியர் முதலிய பிற்காலத்தார் இலக்கண நூலுக்கு நாற்பொருளைப் பயனாகக் கூறுகின்றனர். இலக்கிய மாயிருந்தால் அவற்றிற்குப் பொருந்தலாம். இலக்கணத் துள்ளும் பொருளதிகாரமாயின் அறம் முதலான முப்பொருட்கே பொருந்தும் எழுத்தும் சொல்லும் முதலான இலக்கணங்களுக்குப் பயனுக்குப் பயனாய்க் கொண்டா லல்லது அவை நேராய்ப் பயனாகாவே. தொல்காப்பியர் செய்யுளியலில் செய்யுட்குக் கூறும் உறுப்புள் பயன் என்பதும் ஒன்றாகும். இதுநனி பயக்கும் இதன்மாறு என்றும் தொருநிலைக் கிளவி பயன்எனப் படுமே