பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 ஆன்றோரும் தாம் கூறக் கருதிய அரிய உண்மைகளை எடுத்துரைக்க ஆசிரியப் பாவையே மேற்கொண்டனர். அரசர் போன்றாரது செவிகளில் செவியறிவுறுவாக ஆணித்தரமாக எடுத்துரைக்க அகவற்பாவே துணைசெய்தது. எனவே தம் நூலை முன்னோர் சென்ற முறையினை ஒட்டிக் கொங்கு வேளிர் அகவற்பாவால் ஆக்கினார். சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றைப் போலவே பெருங்கதையும் பொருட்செறிவும், நடையழகும், அணிநயமும் பெற்று விளங்குகின்றது. இடைக்காலச் சோழர்களின் ஆட்சிக் காலம் வரை ஆசிரியப்பாவின் செல்வாக்கு இருந்து வந்தது. சோழ மன்னர்கள் தமது மெய்க்கீர்த்திகளை ஆசிரியப்பாக்களில் அமைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேனாட்டு யாப்புகள் தமிழ்ப் புலவர்களேயன்றி, முற்காலத்தில் காவியங்கள் இயற்றப் புகுந்த மேலைநாட்டுப் புலவர்களும் அகவல் அமைப்பின்ையுடைய ஒருவகை யாப்பையே கையாண்டு வந்தனர் என்று அறிகிறோம். ஆங்கிலம் போன்ற மொழிகளில் கவிஞர்கள் தனிப் பாடல்களை நாலடி முதலியனவாக அமைத்தனர். தொடர் நிலைச் செய்யுள்களைப் பல நீண்ட அடிகளால் அமைத்தனர். நாலடிப் பாடல்களில் எதுகை, மோனை போன்ற அமைப்பினை உடைய ஓர் இயைபுத் தொடை (Rhyme) யினை அமைத்தனர். ஆனால், தொடர்நிலைச் செய்யுட்களை எதுகை மோனை வேண்டாது வெறும் யாப்பிலேயே (Blank Verse) அமைத்தனர். எதுகை மோனைகளைக் காட்டிலும் தொடர்நிலைச் செய்யுள்கட்கு வெறும் யாப்பே சிறந்ததெனக் கருதப்பட்டது. செகப்பிரியரின் நாடகங்கள் முதலிய புகழ் பெற்ற நூல்கள் வெறும் யாப்பில் அமைத்தெழுதப்பட்டன. இத்தகைய யாப்பு முறை அறிஞர்களாலும் திறனாய் வாளராலும் பாராட்டப்பெற்றது. இயைபுத் தொடை அமைந்த யாப்புகள் அடிஇறுதியில் எதுகை மோனைகள் அமையப் பெற்றவை. தமிழக