பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 அம்மை முதலான எட்டு அம்மை முதலான எட்டின் பொதுப்பெயர் தொல்காப்பியர் செய்யுளியலின் முதல் நூற்பாவில் ாத்திரை முதல் வண்ணம் ஈறாக இருபத்தாறினைக் கூறி, அவற்றை 'யாப்பியல் வகையின் ஆறுதலை யிட்ட அந்நாலைந்து' என்று கூறிவிட்டு, அதன்பின், 'அம்மை அழகு தொன்மை தோலே விருந்தே இயைபே புலனே இழைபெனப் பொருந்தக் கூறிய எட்டு" என்று கூறி, மேற்கூறிய இருபத்தாறினோடு இவ்வெட்டையும் சேர்த்து முப்பத்து நான்கையும் நல்லிசைப் புலவர் செய்யுள் _றுப்பெனக் கூறி வகுத்துரைத்தார் என்று கூறியுள்ளார். பாத்திரை முதல் வண்ணம் ஈறானவற்றை யாப்பியல் வகை யின் ஆறு தலையிட்ட அந்நாலைந்து (இருபத்தாறு) என்று கூறிய தொல்காப்பியர், அம்மை முதலானவற்றைப் பொருந்தக் கூறிய எட்டு என்று மட்டும் கூறினாரேயொழிய அவ் வெட்டிற்கும் சேர்த்து என்ன பெயர் என்பதைக் கூறாது விட்டார். இதனைப் போலவே யாப்பருங்கலம் என்னும் நூலும் "அம்மை முதலிய ஆயிரு நான்மையும்" (நூற்பா - 95) என்றே கூறியுள்ளது. இதற்கு உரையெழுதிய யாப்பருங்கல விருத்தியாசிரியர் 'அம்மை முதலாகிய எட்டு யாப்பலங்காரம்" என்று உரை எழுதியுள்ளார். இதனால் அம்மை முதலிய எட்டிற்கும் யாப்பலங்காரம் என்றொரு பெயர் இருப்பதாகத் தெரிகிறது. யாப்பருங்கலக் காரிகை ஒழிபியல் "மருள்தீர் விகாரம் வகையுள் வாழ்த்து வகை வனப்பு" என்று கூறுகின்றது. தென் உரையில் காளிகையுரையாசிரியர் இனி வனப்பு எட்டுவகைப்படும்; அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என என்னை?