பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

281 பார்த்த நாம் பாம்பாகவே கருதிவிட்டோம். உடனே அஞ்சித் துள்ளிக் குதித்து அப்பாற் சென்று சற்றுத் துரமான இடத்தில் நின்று கொண்டு அவ்வுருவத்தை உற்றுப் பார்த்தோம். அவ்வுருவம் அசையாமலேயே கிடந்தது. இந்த நிலையில் இது பாம்போ கயிறோ என்று இருபாற் கவர்வுற்று இடையூசலாடி ஒரு பாற்படாத உணர்வோடு நின்றோம். பின்னர் ஒரு கல்லினை எடுத்து அதன் மேல் வினோம். அப்பொழுதும் அவ்வடிவம் அசையாமற் கிடந்தது. உடனே ஒரு கோலால் அதனைத் துாக்கிப் பார்த்த பொழுது அது ஒரு நார்க்கயிறாக இருந்தது. இந்த நிலையில் நம்மிடம் மூன்றுவகையான உணர்வு ஒன்றன்பின் ஒன்றாய் நிகழ்ந்துள்ளன. முதலில் கயிற்றினைப் பாம்பென்றே கருதிய உணர்வும், இரண்டாவது பாம்போ கயிறோ என்ற _ணர்வும் மூன்றாவது பாம்பன்று இது கயிறே என்று உணர்ந்த உணர்வும் என்பனவாம் அவை. இந்த மூன்று _ணர்வு நிலையில் பழுதையைப் பாம்பென்று கருதிய திரிபு நிலைக்குத்தான் கற்பனை என்று பெயர். ஆரோபம் அத்தியாசம் கற்பனை யான வெல்லாம் ஒரோர்வந்துவினைவேறே ஒரோர்வத் துருவன வோர்தல் நாரூடு பணியாய்த் தோன்றல் - கைவல்லியம் ஆரோபம் அத்தியாசம் கற்பனை என்று சொல்லக்கூடிய எல்லாம் ஒரு பொருளை மற்றொரு பொரு ளாக உணர்ந்து கொண்ட திரிபுணர்வாகும். கால விசேடம் பற்றி இட விசேடம் பற்றி நார்க் கயிறொன்றனைப் பாம்பாக உணர்ந்து கொண்டது போன்றதாம் என்பது மேற்பாட்டின் பொருளாகும். பாரத நாட்டில் உள்ள பலவகை மதங்களுள் சங்கரரால் நிலைநாட்டப்பட்ட அத்துவித மதம் கற்பனா வாதத்தை அடிப்படையாகக் கொண்டதாம். சத்து சித்து ஆனந்த மயமான பிரம வடிவம் ஒன்றே நிலைபேறாக உள்ளது. கிளிஞ்சிலில் வெள்ளி தோன்றுகின்றாற் போல அப்பிரம வடிவத்தில் நாம பேதக் கிரியை என்னும் மாயா கற்பனையால் இவ்வுலகம் தோன்றியுள்ளது என்றல் அவர்தம் கருத்தாகும்.